செய்திகள் இந்தியா
ராஜஸ்தானில் காவல் ஆய்வாளர் ஃபூல் முஹம்மது எரித்து கொல்லப்பட்ட வழக்கில் 30 பேருக்கு ஆயுள் தண்டனை
ஜெய்ப்பூர்:
ராஜஸ்தானில் காவல் ஆய்வாளர் ஃபூல் முகமது எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் 30 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
2011ஆம் ஆண்டு ராஜஸ்தானில் சுர்வால் கிராமத்தைச் சேர்ந்தவர் வழக்கு ஒன்றில் காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி நீர்த்தேக்க தொட்டி மீது ஏறி நின்று தற்கொலை மிரட்டல் விடுத்தார்.
அப்போது, காவல் ஆய்வாளராக இருந்த ஃபூல் முஹம்மது அவரை சமாதானப்படுத்தி கீழே இறங்கவைக்கும் நோக்கில் அங்கு சென்றார்.
எனினும், அந்த நபர் கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
அந்த நபர் காவல் துறை மீது குற்றம்சாட்டி தற்கொலை செய்து கொண்டதால் பொதுமக்களின் கோபம், காவல் துறை மீது திரும்பியது.
ஆய்வாளர் முஹம்மதை சூழ்ந்து கொண்டு சரமாரியாக கற்களை வீசினர். அவரது ஜீப்பை தொடர்ந்து விரட்டிச் சென்று கற்களை வீசினர். இதனால் ஜீப்பிலேயே அவர் மயங்கிச் சரிந்தார்.
அப்போது, அக்கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஜீப்புடன் சேர்த்து அவரை தீவைத்து கொலை செய்தனர். இந்த சம்பவம் ராஜஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பின்னர், இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. சாவானி மாதோபூர் சிறப்பு நீதிமன்றம் வழக்கை விசாரித்து வந்த நிலையில், இப்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதில் 30 பேரை குற்றவாளிகள் என உறுதி செய்து, ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. குற்றம்சாட்டப்பட்டவர்களில் 49 பேர் போதிய ஆதாரம் இல்லாத காரணத்தால் விடுவிக்கப்பட்டனர்.
தொடர்புடைய செய்திகள்
December 13, 2025, 1:20 pm
கேரள உள்ளாட்சித் தேர்தல்: காங்கிரஸ் கூட்டணி முன்னிலை; பாஜக கூட்டணி பின்னடைவு
December 12, 2025, 4:03 pm
திருப்பரங்குன்றம் விவகாரம்: அனுராக் தாக்கூருக்கு எதிராக திமுக எம்.பி.க்கள் மக்களவையில் முழக்கம்
December 8, 2025, 10:53 pm
கோவா தீ விபத்தில் 25 பேர் மரணம்
December 6, 2025, 4:07 pm
இண்டிகோ விமான சேவை ரத்து; ஒரு நிறுவனத்தின் ஏகபோகத்தால் அப்பாவி மக்கள் பாதிப்பு: ராகுல் கடும் விமர்சனம்
December 2, 2025, 9:12 pm
ரஷ்ய அதிபர் புட்டின் இந்தியாவுக்கு இரண்டு நாள் பயணம் மேற்கொள்கிறார்
November 28, 2025, 8:24 pm
திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்: தேவஸ்தான மூத்த அதிகாரி கைது
November 27, 2025, 9:26 am
மண்டல வழிபாடு தொடங்கிய 8 நாட்களில் சபரிமலையில் 8 பேர் மாரடைப்பால் உயிரிழந்தனர்
November 25, 2025, 11:39 pm
