நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் ஆயுதப்படை, ரேலாவின் உதவி கோரப்படும்: உள்துறை அமைச்சர்

கோலாலம்பூர்:

எதிர்வரும் பொதுத்தேர்தல் சமயத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் பட்சத்தில், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய காவல்துறை உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று உள்துறை அமைச்சர் ஹம்சா ஸைனுடின் தெரிவித்துள்ளார்.

மேலும் ரேலா படையினரும், ஆயுதப்படையினரும் இப்பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் குறிப்பிட்டார்.

குறிப்பாக வெள்ளப்பாதிப்பு அதிகமாக உள்ள பகுதிகளில் இவர்கள் களமிறக்கப்படுவர் என்று உள்துறை அமைச்சர் கூறினார்.

"பெரும்பாலான காவல்துறையினர் தேர்தல் தொடர்பான பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருப்பார்கள். எனவே ரேலா, ஆயுதப் படையினரின் சேவை தேவைப்படுகிறது.

"உள்துறை அமைச்சைப் பொறுத்தவரையில் சுமார் 80 ஆயிரம் பேர், தேர்தல் தொடர்பான பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றன. எனினும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் பட்சத்தில் கூடுதல் எண்ணிக்கையிலானவர்கள் தேவைப்படுவர்.

"எனவேதான் ரேலா படையின் உதவியைக் கோரியுள்ளோம். அந்த எண்ணிக்கையும் போதுமானதாக இல்லையெனில் ராணுவத்தையும், பிற முகமைகளையும் உதவிக்கு அழைப்போம்.

"பருவ மழைக்காலம்  என்பதால் வெள்ளப்பெருக்கு என்பதே இப்போது முக்கியப் பிரச்சினையாக உள்ளது. வெள்ளப்பெருக்கின்போது வாக்களிக்க வேண்டும் என்றால் வாக்காளர்கள் அதிருப்தி அடைவர். இச் சமயம் பொதுமக்களின், குறிப்பாக வாக்காளர்களின் பாதுகாப்பை காவல்துறை உறுதி செய்ய வேண்டும்," என்று உள்துறை அமைச்சர் ஹம்சா ஸைனுடின் மேலும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset