செய்திகள் மலேசியா
தைப்பூச விழாவில் மற்ற இன மக்கள் கலந்து கொள்வதால் அவர்கள் இந்துவாக மாறி விட மாட்டார்கள்: டத்தோஸ்ரீ சரவணன்
பத்துமலை:
தைப்பூச விழாவில் மற்ற இன மக்கள் கலந்து கொள்வதால் அவர்கள் இந்துவாக மாறி விட மாட்டார்கள்.
மஇகா துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம். சரவணன் இதனை கூறினார்.
நாடு தழுவிய நிலையில் தைப்பூச விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
தைப்பூசம் ஒரு சமய விழாவாக இருந்தாலும் அனைத்து இன மக்களும் இதில் கலந்து கொண்டுள்ளனர்.
இவ்விழாவில் கலந்து கொள்வதால் அவர்கள் இந்துவாக மாறிவிட மாட்டார்கள். காரணம் அவரவருக்கென சமய நம்பிக்கை உள்ளது. இதை யாராலும் மாற்ற முடியாது.
பத்துமலை தைப்பூச விழாவில் உரையாற்றிய டத்தோஸ்ரீ சரவணன் இதனை வலியுறுத்தினார்.
பத்துமலையில் பல அபிவிருத்திகளை மேற்கொண்டு இன்று உலக பிரசித்தி தளமாக திருப்பணி செம்மல் டான்ஸ்ரீ நடராஜா உருவாக்கி உள்ளார். அதே வேளையில் பத்துமலை பக்திமலையாகவும் அவர் உருவாக்கி உள்ளார்.
அவரின் திருப்பணிகள் தொடர முருகப் பெருமான் அவருக்கு நீண்ட ஆயுளை வழங்க வேண்டும் என்று டத்தோஸ்ரீ சரவணன் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
February 11, 2025, 4:16 pm
திரளான பக்தர்களின் வருகையே பத்துமலை தைப்பூச விழாவின் வெற்றிக்கான காரணம்: டான்ஸ்ரீ நடராஜா
February 11, 2025, 2:02 pm
தேசிய போலிஸ்படைத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ அயோப் கான் பத்துமலைக்கு சிறப்பு வருகை
February 11, 2025, 12:52 pm
பத்துமலையில் அமைக்கப்பட்டுள்ள இந்தியர் கலாச்சார மையம் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத்தின் சாதனை: பிஎன் ரெட்டி
February 11, 2025, 12:32 pm
வெள்ளத் தணிப்புத் திட்டம் தொடர்ந்து தாமதமானால் அதிக இழப்பைச் சந்திக்க நேரிடும்: துவான் இப்ராஹிம்
February 11, 2025, 12:12 pm
சபா, சரவாக்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 2,062 பேர் இன்னும் நிவாரண மையங்களில் உள்ளனர்
February 11, 2025, 12:05 pm
பேரங்காடியில் பிள்ளையை அறைந்த வீடியோவில் சிக்கிய பெண் கைது
February 11, 2025, 11:05 am
பினாங்கு தைப்பூச இரத ஊர்வலத்தில் முருக பக்தர்களோடு இலக்கவியல் அமைச்சர்
February 11, 2025, 10:07 am