நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பத்துமலையில் அமைக்கப்பட்டுள்ள இந்தியர் கலாச்சார மையம் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத்தின் சாதனை: பிஎன் ரெட்டி

பத்துமலை:

பத்துமலையில் அமைக்கப்பட்டுள்ள இந்தியர் கலாச்சார் மையம் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத்தின் சாதனையாகும்.

மலேசியாவுக்கான இந்திய தூதர் பிஎன் ரெட்டி இதனை கூறினார்.

பத்துமலை தைப்பூச விழாவில் தொடர்ச்சியாக கலந்து கொண்டு வருகிறேன்.

ஒவ்வொரு ஆண்டும் இங்கு வரும்போதும் பல அபிவிருத்தி பணிகளை நான் காண்கிறேன்.

குறிப்பாக இந்த முறை பத்துமலையில் இந்தியர் கலாச்சார மையம் கட்டப்பட்டு அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டுள்ளது.

இந்த கலாச்சாரம் மையம் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத்தின் மிகப் பெரிய சாதனையாகும்.

அதே வேளையில் இந்த கலாச்சாரம் மையத்தின் தொடர் வளர்ச்சிக்கு இந்திய தூதரகம் முழு ஒத்துழைப்பை தரும்.

அதே வேளையில் பத்துமலையை உலக தரத்திற்கு ஒரு மாற்றிய தேவஸ்தானத்திற்கு இந்திய தூதரகம் முழு ஆதரவை தரும் என்று அவர் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset