நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பேரங்காடியில்  பிள்ளையை அறைந்த வீடியோவில் சிக்கிய பெண் கைது

அராவ்:

பேரங்காடியின்  நடைபாதையில் தனது பிள்ளையை அறைந்து காயப்படுத்தியதாகக் கூறப்படும் ஒரு பெண் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

சம்பந்தப்பட்ட சிசிடிவி வீடியோ பதிவு வைரலானதை தொடர்ந்து 37 வயதான சிற்றுண்டி ஊழியரான அவர் கைதானார்.

அவர் தனது பிள்ளையை பலமுறை அறைவதையும், பிள்ளை விழுந்து அருகிலுள்ள நாற்காலி விளிம்பில் மோதுவதையும் காட்டுகிறது.

அராவ் போலிஸ் தலைவர் அஹ்மத் மொஹ்சின் முகமட் ரோடி கூறுகையில், 

இன்று அதிகாலை 12.16 மணியளவில் சம்பந்தப்பட்ட பெண்ணின் நடவடிக்கைகள் குறித்து காவல்துறைக்கு புகார்  கிடைத்தது.

இதனை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார் என்று அவர் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset