நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பத்துமலையில் மேற்கொள்ளப்படும் மேம்பாட்டுத் திட்டங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும்: டான்ஶ்ரீ நடராஜா

பத்துமலை:

பத்துமலையில் மேற்கொள்ளப்படும் மேம்பாட்டுத் திட்டங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும்.

ஶ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தான தலைவர் டான்ஶ்ரீ டாக்டர் ஆர். நடராஜா கூறினார்.

பத்துமலையை பாருங்கள் எத்தனை உருமாற்றங்கள் கண்டுள்ளது.

பக்தர்களின் கால்களில் கற்கள் குத்தக் கூடாது என்பதற்கான வழி தடங்கள் புதுபிக்கப்பட்டது.

இந்தியர் கலாச்சார மையங்கள் கட்டப்பட்டுள்ளது. கழிவறைகள் புதியதாக கட்டப்பட்டுள்ளது.

அடுத்து நகரும் மின் படிக்கட்டு, 3 ஆயிரம் பேர் அமரக்கூடிய மண்டபம்  ஆகியவை கட்டப்படவுள்ளது.

இவை அனைத்தும் மக்கள் பயன் பெறும் நோக்கில் மேற்கொள்ளப்படவுள்ளது.

ஆகவே இது தொடர்பான குற்றச்சாட்டுகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும்.

பத்துமலை தைப்பூச விழாவில் தகவல் மையத்தை திறந்து வைத்த டான்ஶ்ரீ நடராஜா இதனை கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset