நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சபா, சரவாக்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட  2,062 பேர் இன்னும் நிவாரண மையங்களில் உள்ளனர்

கோத்தா கினபாலு:

சபா, சரவாக்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட  2,062 பேர் இன்னும் நிவாரண மையங்களில் தங்கி உள்ளனர்.

சபாவில் நேற்று இரவு வர 325 குடும்பங்களைச் சேர்ந்த 1,047 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருந்தனர்.

இந்த எண்ணிக்கை இன்று காலை  332 குடும்பங்களைச் சேர்ந்த 1,061 பேராக அதிகரித்துள்ளது.

சபா  மாநில பேரிடர் மேலாண்மைக் குழு இதனை அறிவித்துள்ளது.

சரவா மாநிலத்தில் 1,001 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு ஒன்பது நிவாரண மையங்களில் தங்கியுள்ளனர்.

இந்த எண்ணிக்கை நேற்று இரவு 992 பேராக பதிவானது.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset