நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வெள்ளத் தணிப்புத் திட்டம் தொடர்ந்து தாமதமானால் அதிக இழப்பைச் சந்திக்க நேரிடும்: துவான் இப்ராஹிம்

கோலாலம்பூர்:

வெள்ளத் தணிப்புத் திட்டம் தொடர்ந்து தாமதமானால் அதிக இழப்பைச் சந்திக்க நேரிடும்.

முன்னாள் சுற்றுச்சூழல், நீர்வள அமைச்சர் துவான் இப்ராஹிம் இந்த எச்சரிக்கையை விடுத்தார்.

மீண்டும் ஒரு வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட பிறகு  பிரதமர் அன்வார் ரத்து செய்த வெள்ளத் தணிப்புத் திட்டம் குறித்து தான் கூறியது சரி என்று நிரூபிக்கப்பட்டு உள்ளது.

இந்தத் திட்டம் தாமதமானால், மலேசியா அதன் செலவைவிட அதிக இழப்பைச் சந்திக்க நேரிடும். இதை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும்.

இன்று, 2023 ஆம் ஆண்டு வெள்ளத்தால் நாடு மொத்தம் 755.4 மில்லியன் ரிங்கிட் அல்லது மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் ஒப்பிடும்போது 0.04 சதவீதம் இழப்புகளைச் சந்தித்தது.

இதில் விவசாயத் தொழிலுக்கு 120.6 மில்லியன் ரிங்கிட் இழப்புகளும் அடங்கும் என்றார் அவர்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset