செய்திகள் வணிகம்
முக்கிய பொறுப்பு வகித்த 200 இந்தியர்கள் உட்பட 50% ஊழியர்கள் பணிநீக்கம்: டிவிட்டர் அதிரடி
நியூயார்க்:
டிவிட்டரில் பணியாற்றும் 7,500 பணியாளர்களில் 50 சதவீதத்தினரை பணியில் இருந்து நீக்கும் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.
டிவிட்டர் நிறுவனத்தை கடந்த வாரம் வாங்கிய உலகின் மிகப் பெரிய பணக்காரர் எலான் மஸ்க் இந்த நடவடிக்கையை தொடங்கி உள்ளார்.
இந்தியாவில் முக்கிய பொறுப்புகளில் இருந்த 200க்கும் மேற்பட்டோர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக பணியாளர்களுக்கு மின்னஞ்சல் மூலம் அறிவிப்பு வெளியாக வருவதாக நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
ட்விட்டரின் நிதிநிலையை வலுவான பாதைக்கு கொண்டு செல்ல, பணி நீக்க நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.
அனைத்து அலுவலகங்களும் பணியாளர்களின் பாதுகாப்புக்காக தற்காலிகமாக மூடப்படுகின்றன.
அலுவலகங்களுக்கு வந்துவிட்ட பணியாளர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப வேண்டும். அலுவலகத்துக்குப் புறப்படவுள்ள பணியாளர்கள் அலுவலகம் வர வேண்டாம்.
அனைத்துப் பணியாளர்களுக்கும் மின்னஞ்சல் வழியாக அறிவுறுத்தல் அனுப்பி வைக்கப்படும் என்று ட்விட்டர் தெரிவித்துள்ளது.
200க்கும் மேற்பட்ட இந்திய பணியாளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்தியாவில் சந்தைப்படுத்துதல் மற்றும் தகவல் பரிமாற்றம் துறைகளில் பணியாற்றிய அனைவரும் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அவர்கள் பெரும்பாலும் ஆளும் கட்சியின் கட்டுப்பாட்டில் இருந்து இயங்குபவர்கள் என்றும் கூறப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
December 13, 2025, 10:50 am
இந்தியா முழுவதும் ஒரு கோடி பேல் பருத்தி தரம் குறைவு: புதிய நெருக்கடியால் இந்திய ஜவுளித் தொழிலில் பாதிப்பு
December 9, 2025, 9:26 am
Perplexity என்ற AI நிறுவனத்தில் முதலீட்டாளராக ரொனால்டோ இணைந்துள்ளார்
December 8, 2025, 2:40 pm
ஈப்போவில் aA கிலாசிக் ஹோம் 3 வது கிளை நிறுவனத்தை நடிகை ஸ்ரீ திவ்வியா அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்தார்
December 6, 2025, 6:44 pm
MS Gold 5ஆவது கிளையை லிட்டில் சூப்பர் ஸ்டார் சிலம்பரசன் திறந்து வைத்தார்
December 4, 2025, 7:24 am
இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி: ஒரு அமெரிக்க டாலர் மதிப்பு ரூ.90 ஆக சரிவு
November 24, 2025, 5:35 pm
200 ரிங்கிட் வெகுமதியுடன் Get Driver திட்டத்தை ஜிவி ரைட் அறிமுகப்படுத்துகிறது
November 19, 2025, 4:12 pm
