நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தொழில்நுட்பம்

By
|
பகிர்

எரிபொருள் இன்றி முற்றிலும் மின்சார பேட்டரியால் இயங்கும் குட்டி விமானம் அமெரிக்காவில் அறிமுகம்

கலிபோர்னியா: 

எரிபொருள் இல்லாமல் முற்றிலும் மின்சார பேட்டரியால் இயங்கும்  குட்டி விமான டாக்சினை அமெரிக்காவில் ஆர்ச்சர் ஏவியேஷன் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. 

மேக்கர் என பெயரிடப்பட்டுள்ள இந்த விமான டாக்சியின் சிறப்பு அம்சங்கள் குறித்து கலிபோர்னியாவில் செய்தியாளர்களுக்கு விளக்கப்பட்டது. முற்றிலும் பேட்டரியால் இயங்குவதால் சுற்றுச்சூழலுக்கு இது தீங்கு ஏற்படுத்தாது. 

ஹெலிகாப்டர் போன்ற வாகனத்தில் செங்குத்தாக மேல் எழும்பும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள மேக்கர், பின்னர் விமானம் போன்று பறக்கும் திறனுடையது. மணிக்கு 240 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் இந்த குட்டி விமானத்தை முதல் கட்டமாக 100 கிலோ மீட்டர் தூரம் வரை உள்ள நகரங்களுக்கு இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. 

தற்போது அறிமுகம் செய்யப்பட்டிருந்தாலும் 2024 ம் ஆண்டு தான் இந்த பறக்கும் டாக்சி பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 4 பேர் பயணிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள மேக்கர் விமானத்திற்கு அனுமதி கோரி அமெரிக்க விமானத்துறைக்கு விண்ணப்பித்துள்ளதாக தெரிவிக்கும் ஆர்ச்சர் ஏவியேஷன் நிறுவனம், சில மாதங்களில் அனுமதி கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கூறியிருக்கிறது. 

தொடர்புடைய செய்திகள்

+ - reset