செய்திகள் மலேசியா
நாடு முழுவதும் ICU-வில் 905 பேர் அனுமதி: சுகாதார அமைச்சு தகவல்
கோலாலம்பூர்:
நாடு முழுவதும் தீவிர சிகிச்சைப்பிரிவில் உள்ள நோயாளிகளின் எண்ணிக்கை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தற்போது 905 நோயாளிகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பது தெரியவந்துள்ளது. இவர்களில் 453 நோயாளிகளுக்கு சுவாச உதவி தேவைப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த மே 28ஆம் தேதி நாடு முழுவதும் 808 கொரோனா நோயாளிகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அதன்பின்னர் இன்று வரை நோயாளிகளின் எண்ணிக்கை குறையவில்லை. மாறாக இந்த எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்தபடியே இருந்து இன்று 905 என்ற புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
கடந்த சில நாட்களாகவே நாட்டின் சுகாதார கட்டமைப்பு கடும் அழுத்தங்களைச் சந்தித்து வருவதாக அதன் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் கூறிவந்தார்.
குறிப்பாக தீவிர சிகிச்சைப் பிரிவில் அதிகமானோர் அனுமதிக்கப்பட்டிருப்பது கவலை அளிப்பதாகவும் அவர் கூறினார். அதற்கேற்ப தினந்தோறும் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்போரின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.
தொடர்புடைய செய்திகள்
August 24, 2026, 5:25 pm
மலாக்கா மாநில ஆளுநர் பிறந்தநாள்: கல்வி அமைச்சர் FADLINA SIDEKக்கிற்கு டத்தோஸ்ரீ பட்டம்
August 24, 2026, 5:03 pm
திரைப்படத் துறை சார்ந்தவர்களை ஃபினாஸ் அழைக்கிறது; குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்படும்: அஸ்மிர்
August 24, 2026, 4:56 pm
மஸ்ஜித் இந்தியா முஸ்லிம் சுங்கை சிப்புட் இளைஞர் பிரிவின் மெர்டேக்கா நடைபயணம்
August 24, 2026, 4:44 pm
மெர்டேக்கா சதுக்கத்தில் தேசிய தின உரையை பிரதமர் அன்வார் நிகழ்த்துகிறார்
August 24, 2026, 4:08 pm
பள்ளி விடுமுறை, தேசிய விடுமுறை நாட்களுக்காக கே.டி.எம் 8 உத்தாரா ரயில் சேவைகளை வழங்குகிறது
August 24, 2026, 4:03 pm
