செய்திகள் மலேசியா
ஜொகூர் மாநிலத் தேர்தல்; இந்திய சமூகத்தினரிடமிருந்து மஇகா தொடர்ந்து ஆதரவைப் பெறும்: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
கூலாய்:
ஜொகூர் மாநிலத் தேர்தலில் இந்திய சமூகத்தினரிடமிருந்து மஇகா தொடர்ந்து ஆதரவைப் பெறும்.
அக்கட்சியின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்ஏ விக்னேஸ்வரன் இதனை கூறினார்.
16ஆவது ஜொகூர் மாநிலத் தேர்தல் நாளை நடைபெறவுள்ளது.
இந்த தேர்தலில் மஇகா போட்டியிடும் தொகுதிகளுடம் தேசிய முன்னணி வேட்பாளருக்கு இந்திய சமூகம் தொடர்ந்து ஆதரவளிக்கும்.
இந்திய சமூகம் சம்பந்தப்பட்ட பல்வேறு பிரச்சினைகளைக் கொண்டுவந்து தீர்ப்பதில், மத்திய, மாநில அரசுகளுடன் மஇகா கொண்டுள்ள நல்லுறவின் அடிப்படையிலேயே இந்த நம்பிக்கை அமைந்துள்ளது.
மாநில அளவில், மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படுவதை உறுதிசெய்ய மாநில அரசுடன் இணைந்து பணியாற்றக்கூடிய தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் நமக்குத் தேவை.
பிரச்சார காலம் முழுவதும், அரசியல் எதிரிகள் மீதான தனிப்பட்ட தாக்குதல்களைத் தவிர்த்து, மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் முயற்சிகளில் கவனம் செலுத்துவதன் மூலம் மஇகா ஒரு முதிர்ச்சியான அணுகுமுறையைக் கையாண்டதாக டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கூறினார்.
இந்த ஜொகூர் மாநிலத் தேர்தலில், கெமெலா மாநில சட்டமன்றத்தில் கே. ரவீன் குமார், கஹாங்கில் வி. ருகேந்திரன், பெர்லிங்கில் பி. பன்னீர் செல்வம், புக்கிட் பத்துவில் ஆர். குமரன் என மஇகா சார்பில் நான்கு வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 10, 2026, 11:17 pm
அதிகரித்துள்ள சீன, இந்தியர்களின் ஆதரவு; தேசிய முன்னணிக்கு ஒரு புதிய அலை: ஜாஹித்
July 10, 2026, 11:17 pm
ஜொகூர் மாநிலத் தேர்தல் முடிவுகள் ஒற்றுமை அரசாங்கத்தின் உறவைப் பாதிக்காது: ஜாஹித்
July 10, 2026, 4:51 pm
டிலி மை எக்ஸ்போ 2.0 கண்காட்சி முக்கிய மைல்கல்லைப் பதிவு செய்துள்ளது: டைலான்
July 10, 2026, 4:19 pm
