செய்திகள் மலேசியா
ஜொகூர் மாநிலத் தேர்தல் முடிவுகள் ஒற்றுமை அரசாங்கத்தின் உறவைப் பாதிக்காது: ஜாஹித்
கூலாய்:
ஜொகூர் மாநிலத் தேர்தல் முடிவுகள், மத்திய அளவில் ஒற்றுமை அரசாங்கத்தின் உறவைப் பாதிக்காது.
துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அஹ்மத் ஜாஹித் ஹமிடி இதனை வலியுறுத்தினார்.
இந்த சட்டமன்றத் தேர்தலில் இரு கூட்டணிகளும் மோதிக்கொண்ட போதிலும், அரசாங்கத்தில் உள்ள தேசிய முன்னணி, நம்பிக்கை கூட்டணி தலைவர்களுக்கு இடையேயான உறவு தொழில்முறையாகவே தொடரும்.
இதுவரை, அது சீர்குலைக்கும் விதமாக இல்லை.
நாங்கள் தொழில்முறையாகப் பணியாற்றும் அமைச்சர்கள், துணையமைச்சர்கள் என்பதால், அந்த நிலைமை தொடரும் என்று நான் நம்புகிறேன்.
ஜொகூரில் எங்களுக்கு மாறுபட்ட கருத்துக்கள் இருக்கலாம். மேலும் எங்கள் வேட்பாளர்களின் ஆதரவைப் பெறுவதற்காக நாங்கள் பிரச்சினைகளை எழுப்பலாம்.
ஆனால், ஒவ்வொரு அமைச்சரவைக் கூட்டத்திலும் நாங்கள் ஞானத்துடனும், கனிவுடனும், தொழில்முறைப் பண்புடனும் கலந்தாலோசிக்கிறோம் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 10, 2026, 11:17 pm
அதிகரித்துள்ள சீன, இந்தியர்களின் ஆதரவு; தேசிய முன்னணிக்கு ஒரு புதிய அலை: ஜாஹித்
July 10, 2026, 4:51 pm
டிலி மை எக்ஸ்போ 2.0 கண்காட்சி முக்கிய மைல்கல்லைப் பதிவு செய்துள்ளது: டைலான்
July 10, 2026, 4:19 pm
