நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அனைத்து மலேசியர்களுக்கும் பயனளிக்க அயராது உழைக்கிறோம்: - மனம் திறக்கும் HRD Corp தலைமைச் செயலதிகாரி டத்தோ ஷாஹுல்

மனித வள மேம்பாட்டு HRD Corp பல்வேறு பணிகளை ஆக்கப்பூர்வமாகவும் வெற்றிகரமாகவும் சாதித்துள்ளது.

அதன் தலைமைச் செயல் அதிகாரி டத்தோ ஷாஹுல் ஹமீத் தாவூத், அப்பணிகள் குறித்து இந்தப் பேட்டியில் அவர் விரிவாக விவரித்துள்ளார்.

ஹெச்ஆர்டி கார்ப் உறுப்பினர்கள் சபா, சரவாக்கில் உள்ளவர்கள் உட்பட அனைத்து மலேசியர்களுக்குப் பயனளிக்கும் வகையில் அயராது உழைக்க விரும்புகிறார்கள் என்றும் அதற்கான காரணங்கள் குறித்தும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

HRD Corpன் தலைமைச் செயல் அதிகாரியாகப் பொறுப்பேற்றது முதல் அந்நிறுவனத்தின் பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளார் டத்தோ ஷாஹுல் ஹமீத் தாவூத்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் அந்நிறுவனம் அடைந்துள்ள பரிணாம வளர்ச்சி குறித்து கேட்டால், ஏராளமான விவரங்களைப் பட்டியலிடுகிறார்.

"தலைமை நிர்வாக அதிகாரியாகப் பொறுப்பேற்றதும், இரண்டு முக்கியமான அம்சங்களுக்கு முன்னுரிமை அளித்தேன். ஊழியர்களிடம் வெலி கட்டணத்தைப் பெறுவது, ஊழியர் மேம்பாட்டுக்கான பயிற்சி மானியங்களை வழங்குவது ஆகியவற்றுடன் இந்நிறுவனத்தை மின்னிலக்க மயமாக்குவதும் முக்கியம் எனக் கருதினேன்.

இரண்டு இலக்குகளையும் வெற்றிகரமாக அடைந்துவிட்டதில் மகிழ்ச்சி. மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம் சரவணனின் தொலைநோக்குப் பார்வையாலும், எங்கள் தலைவர் டத்தோஸ்ரீ ஜமில் சலே மற்றும் HRD Corp நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் வாரிய  உறுப்பினர்களின் ஆதரவாலும்தான் இது சாத்தியமானது.

கடந்த 2021, மார்ச் 1ஆம் தேதி முதல் 18 துறைகள், 238 துணைத் துறைகளை உள்ளடக்கிய PSMB சட்டம் 2001 இன் விரிவாக்கம் நடைமுறைக்கு வந்தது. அதன் பலனாக இன்று எங்களிடம் 75,000 பதிவுசெய்யப்பட்ட முதலாளிகள் 4.1 மில்லியன் ஊழியர்கள் பயிற்சி,  திறன் மேம்பாட்டிற்கு தகுதியுடையவர்களாக உள்ளனர்.

மின்னிலக்க மயமாக்கலுக்கு என புதிய துறையை உருவாக்கி உள்ளோம். ஒரு நிறுவனமாக எங்கள் தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்வதை மதிப்பாய்வு செய்வது, எவ்வாறு இந்த நடவடிக்கையைத் தொடரலாம் என்பது குறித்து விரிவான பரிந்துரைகளை வழங்குவது ஆகியவற்றுக்கு அத் துறை பொறுப்பேற்கும்.

இத்தகைய ஏற்பாடானது மூன்று புதிய தொழில்நுட்ப முன்னெடுப்புகளுக்கு வித்திட்டது. அவை Go-to Cloud, விவேகப் பணியிடம் (Smart Workplace), நிறுவன விரிவாக்கம் Channel Expansion) ஆகும்.

மேலும், இதுதான் MyHRDCORP எனும் மேம்பட்ட செயலியை (சூப்பர் ஆப்) அறிமுகம் செய்வதற்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தது. இன்று மேம்பட்ட செயலியைக் கொண்ட முதல் மலேசிய பொதுத்துறை நிறுவனமாக பெயர் பெற்றுள்ளோம்.

No photo description available.

கே: இந்தப் புதிய செயலி, HRD Corp-ஐ மின்னிலக்க மயமாக்கியது ஆகியவை தொடர்பாக மேலும் சில தகவல்களைப் பகிர முடியுமா?

பதில்: Go-to-Cloud வியூகமானது,  ஒரு நிறுவனத்தின் வேகம், செயல்திறன், சுறுசுறுப்பு ஆகியவற்றை மேம்படுத்தும். மேலும், தரவு பாதுகாப்பை உறுதி செய்யும் அதே வேளையில், ஒரே நேரத்தில் பல கோரிக்கைகளை நிறைவேற்ற இது எங்களுக்கு உதவியது.

விவேகப் பணியிடம் என்ற (Smart Workplace) செயலி, தீர்வுகளானது எங்களுடைய ஊழியர்கள் அலுவலகத்தில் இருந்தபடியோ, வீட்டிலிருந்தபடியோ, வேலை பார்ப்பதைப் பொருட்படுத்துவதில்லை. எனினும் ஊழியர்கள் தங்களுடைய பணிகளை முழுமையாக முடிப்பதுடன், வாடிக்கையாளர்களின் கோரிக்கைகளை திறமையாகக் கையாளவும் செய்கிறார்கள்.

மூன்றாவதாக Channel Expansion. நிறுவன ஊழியர்கள் ஒருவரையொருவர் தொடர்புகொள்வதற்கும், வெளிப் பங்குதாரர்கள் எங்கள் பிரதிநிதிகளை அணுகுவதற்கும் அதிக தளங்களை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அவற்றுள் கவனிக்கத்தக்க அம்சம் Ask Bella AI சாட்பாட் ஆகும்.

MyHRDCORP சூப்பர் செயலி குறித்து?

MyHRDCORP என்ற சூப்பர் செயலியானது, HRD Corp நிறுவனம் குறித்த அண்மைய தகவல்களை அளிக்கும் நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்ட செயலியாகும். எங்கள் நிறுவனத்தின் அனைத்து அம்சங்கள், பொருள்கள், சேவைகள் ஆகிய அனைத்தையும் பயன்படுத்திக்கொள்ள அவற்றை எளிதான ஒரு தளத்தின் கீழ் கொண்டு வருகிறது.

எங்களிடம் பதிவு செய்து கொண்டுள்ள முதலாளிமார்கள், பயிற்சியாளர்கள், பயிற்சி வழங்குநர்கள், மலேசிய தனிநபர்கள் ஆகியோர் தங்களுடைய தனிப்பட்ட, தொழில்முறை, வணிகத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதில், எங்கள் சேவைகளைப் பயன்படுத்த உதவுகிறோம்.

கடந்த ஆகஸ்ட் மாதம் இந்த சூப்பர் செயலி அறிமுகமானது. அப்போது தொடங்கி இப்போது வரை 8,500 முறை இச்செயலி பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. இதன் செயல்பாடுகள் குறித்து எங்கள் பங்குதாரர்கள் ஆக்கப்பூர்வமான, நேர்மறை கருத்துகளையே தெரிவித்துள்ளனர்.

சூப்பர் செயலி மூலம் யார் பலன் அடையலாம்?

இந்தச் செயலியைப் பயன்படுத்தி முதலாளிகள் தங்கள் லெவி கட்டண இருப்பு, மானியங்கள், உரிமை கோரல்களின் நிலை என்னவானது என்பதை அறிந்து கொள்ள முடியும். மேலும் காலியாக உள்ள பணிகள், பணியிடங்கள் தொடர்பான விளம்பரங்களை வெளியிடலாம்.

அதேவேளையில், தனிநபர்கள் வேலை வாய்ப்புகள், பயிற்சி நிகழ்வுகள், திட்டங்களில் பங்கேற்கலாம். பயிற்சியாளர்களும் பயிற்சி வழங்குவோரும் தங்கள் பரிந்துரைகளை அளித்த பின்னர் அவற்றின் தற்போதைய நிலை குறித்து இணையம் வழி அறிந்து கொள்ளலாம். இந்தத் தளத்தின் மூலம் மேலும் பலருக்கு பயிற்சி அளிக்கலாம் என்பதுடன் அதன் செயல் திறன் குறித்தும் தெரிந்து கொள்ளலாம்.

கேள்வி: உங்களுடைய தலைமைத்துவத்தின் கீழ், மேற்குறிப்பிட்ட இரு முக்கியமான அம்சங்கள், முயற்சிகள் தவிர HRD Corp நிறுவனம் மேலும் பல புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி, பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டுள்ளது. அவை குறி்த்து விவரிக்க இயலுமா?

கடந்த 2020ஆம் ஆண்டு, ஜூன் மாதம், கொரோனா தொற்றுப் பாதிப்பு உச்சத்தில் இருந்த வேளையில், பெஞ்சானா Penjana HRDF திட்டத்தை அறிமுகம் செய்தோம்.

பட்டதாரிகளுக்கும் பணி நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கும் திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்பட்டது.

மேலும் வருமானம் ஈட்டும் வாய்ப்புகள் குறித்தும் பி-40 பிரிவில் உள்ளவர்களுக்கு விவரிக்கப்பட்டது.

Upskill Malaysia என்ற திறன் மேம்பாட்டு திட்டமும் உள்ளது. ஒருங்கிணைக்கப்பட்ட, மையப்படுத்தப்பட்ட திறன் மேம்பாடு, பல்திறன் திட்டங்கள் ஆகிய அம்சங்கள் இதில் உள்ளன. இந்தத் திறன் மேம்பாட்டுத் திட்டத்துக்கு அரசாங்க அமைச்சுகளும் முகமைகளும் நிதி வழங்குகின்றன.

HPC என்பது மலேசியர்களின் அனைத்து தேவைகளுக்குமான மெய்நிகர் தளமாகும். வேலை வாய்ப்புகள், வருமானம் ஈட்டுவதற்கான வாய்ப்புகள், பயிசி ஆகியவற்றை வழங்கும்.

தொழில், பயிற்சி சார்ந்த கலந்தாய்வும் பயிற்சியும் அளிக்கப்படும்.

e-LATiH என்பது மலேசியாவின் முன்னணி இணையம் வழி கற்கும் தளமாகும்.

அனைத்து மலேசியர்களுக்கும் இலவச உயர்தர, அனைத்துலக அளவில் அங்கீகரிக்கப்பட்ட திறன் மேம்பாட்டு படிப்புகளுக்கு வாய்ப்பளிக்கும் தளம்.

நாங்கள் அளிக்கும் பயிற்சியை தரம் உயர்த்த, மேம்படுத்த விரும்புகிறோம்.

HRD Corp மைக்ரோக்ரெடென்ஷியல் மூலம் அங்கீகரிக்கப்பட்ட 25,000க்கும் மேற்பட்ட பாடநெறிகளைக் கொண்ட பயிற்சித் திட்டங்கள் உள்ளன.

மைக்ரோ நற்சான்றிதழ் அடிப்படையிலான படிப்புகளின் மிகப்பெரிய களஞ்சியத்தை வைத்திருக்கும் மலேசியாவின் முதல் தொழில்துறை சார்ந்த மைக்ரோ நற்சான்றிதழான HRD கார்ப் மைக்ரோ க்ரெடென்ஷியல் மூலம் எங்கள் பயிற்சி நிலையையும் மேம்படுத்த விரும்புகிறோம்.

- தொடரும்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset