நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பினாங்கு சாலை ஒன்றுக்கு எஸ்.ஏ. அப்துல்லாஹ் புகாரி பெயர்: அதிகாரப்பூர்வமாக திறந்து வைக்க பினாங்கு ஆளுநரிடம் விண்ணப்பம்

ஆயர் ஈத்தாம்: 

முஸ்லிம் மார்க்க அறிஞரும் பினாங்கு தமிழ் முஸ்லிம் மூத்த தலைவருமான எஸ்.ஏ.அப்துல்லாஹ் புகாரியின் பெயர் பினாங்கு அல் மஷுர் பள்ளி  சாலைக்கு சூட்டப்பட்டுள்ளது.

பினாங்கு கபித்தார் பள்ளிவாசலில் நீண்ட காலமாக பள்ளிவாசலின் தலைமை இமாமாக மார்க்க சேவை ஆற்றி வந்த மறைந்த எஸ்.ஏ.அப்துல்லாஹ் புகாரியின் பெயர் அச் சாலைக்குச் சூட்டப்பட்டுள்ளதைப் பினாங்கு மாநில அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

கடந்த அரைநூற்றாண்டுக்கு மேலாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பினாங்கு கபித்தர் பள்ளிவாசலில் மார்க்கக் கல்வியைப் போதித்து வந்த எஸ்.ஏ.அப்துல்லாஹ் புகாரியின் மார்க்கக் கல்வியால் மாணவர்கள் சிறந்த மார்க்க வல்லுநர்களாக நாடு முழுவதும் பரிணமித்து வருகின்றனர் . 

அதேவேளையில் இந்திய முஸ்லிம்களுக்குப் பல வகையில் வழிகாட்டியாகவும் திகழ்ந்தவர் என்ற வகையில் இவரின் பெயர் பினாங்கு மாநில அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 

கடந்த 2021-ஆம் ஆண்டு தனது 90-ஆவது வயதில் எஸ்.ஏ.அப்துல்லாஹ் புகாரி காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது. 

அவரது அடக்கஸ்தலம் கெப்பித்தார் மஸ்ஜித் வளாகத்திற்குள் உள்ளது. 

அந்த சாலையை அதிகாரப்பூர்வமாக திறந்து வைக்க பினாங்கு ஆளுநர் வருகை தர வேண்டும் என்று விண்ணப்பிக்கப்பட்டுள்ளதாக கெபித்தார் பள்ளிவாசலின் தலைவர் டத்தோ ஹாஜி ஃபாரூக் நம்பிக்கையிடம் தெரிவித்தார். 

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset