நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இந்திய சமுதாயத்தின் கல்வி மேம்பாட்டிற்கு ஏம்ய்ஸ்ட், டேப் கல்லூரியை உருவாக்கிய துன் சாமிவேலுக்கு நன்றி: பிரதமர்

புத்ராஜெயா:

இந்திய சமுதாயத்தின் கல்வி மேம்பாட்டிற்கு  ஏம்ய்ஸ்ட் பல்கலைக்கழகம், டேப் கல்லூரியை உருவாக்கிய துன் சாமிவேலுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை தெரிவித்தார்.

இந்தியச் சமுதாயம் கல்வியில் முன்னேற வேண்டும் என்ற தூரநோக்கு சிந்தனையுடன் எம்ஐஇடி கல்வி கடன் திட்டம், ஏய்ம்ஸ்ட் பல்கலைகழகம், டேப்  கல்லூரி  என பல ஆக்க்கபூர்வமான  திட்டங்களை துன் சாமிவேலு உருவாக்கினார்.

அவரின் இந்த சாதனையை நாம் நினைவு கூற வேண்டும்.

புத்ராஜெயாவில் எம்ஐஇடி  கல்வி நிதி வழங்கும் விழாவுக்கு தலைமையேற்று உரையாற்றிய போது பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார்  இப்ராஹிம் இதனை தெரிவித்தார்.

மஇகா கல்விக்கு முக்கியதுவம் கொடுத்து செய்து வரும் இந்த நடவடிக்கைக்கு  அரசாங்கம் நல்ல ஒத்துழைப்பை கொடுக்கும்.  

மஇகா தலைவர்  டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் பாணியில் இந்திய சமுதாய பிரச்சினைகளை ஆக்கப்பூர்வமாக கையாள வேண்டும்.

குறையை மட்டும் பேசுவதை நிறுத்தி விட்டு, சமுதாயத்தில் இருக்கும் பிரச்சினைகளை களைய டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் போல் செயல்பட வேண்டும்.

மேலும் சமுதாய பிரச்சினைகளை என் நேரடி பார்வைக்கு கொண்டு வந்து கலந்து பேசி என்ன நடவடிக்கை எடுக்கலாம் என ஒத்துழைத்து பேசுவதுதான் நல்ல அணுகுமுறை என அன்வார் சுட்டிக் காட்டினார்.

இதனிடையே டேப் கல்லூரியில் திவேட் தொழில் திறன் கல்வி திட்டத்திற்கு  அரசாங்கம் 2 மில்லியன் ரிங்கிட் வழங்கும் என  பிரதமர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset