நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பாலஸ்தீன மக்களின் உரிமைகளைத் தொடர்ந்து ஆதரியுங்கள்: ஐநா உறுப்பு நாடுகளுக்கு மலேசியா வலியுறுத்து

கோலாலம்பூர்:  

ஐநா சபையின் கீழ் உறுப்பு நாடாக இணைவதற்கான பாலஸ்தீனத்தின் விண்ணப்பத்தை மற்ற உறுப்பு நாடுகள் ஆதரிக்கத் தவறியதற்கு மலேசியா வருத்தம் தெரிவித்துள்ளது.

பாலஸ்தீனிய நிலத்தை இஸ்ரேல் சட்டவிரோதமாக ஆக்கிரமித்ததன் மூலம் மேற்கு ஆசியாவில் நிலவும் உறுதியற்ற தன்மைக்கான முக்கிய காரணத்தை நிவர்த்தி செய்வதில் ஐ.நா.வில் பாலாஸ்தீனம் இணைவது ஒரு முக்கியமான ஒன்று என்று ஐ.நா.வுக்கான மலேசியப்ப் பிரதிநிதி டத்தோ டாக்டர் அஹம்மத் பைசல் முஹம்மத் தெரிவித்தார். 

மற்ற நாடுகள் பாலஸ்தீனத்தின் முழு அங்கத்துவத்தை மற்ற நாடுகளும் ஆதரிக்க வேண்டும் என்று மலேசியா கருதுகிறது.

பாலஸ்தீன மக்கள் பல தசாப்தங்களாக இஸ்ரேலிய ஆக்கிரமிப்பின் கீழ் பாலஸ்தீன உரிமைகள் மீறப்பட்டு நிலம் அபகரிக்கப்பட்டதால் அவதிப்பட்டு வருவதாக அவர் கூறினார்.

ஐ.நா-வில் முழு உறுப்பினராவது பாலஸ்தீனிய மக்களின் உரிமைகளை நிறைவேற்ற உதவுகிறது.

இரு நாடுகளின் தீர்வு மற்றும் பாலஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிப்பது போன்ற கோரிக்கைகள் எழுந்தாலும், ஐ.நா.வில் முழு உறுப்பினராக ஆவதற்கு பாலஸ்தீனத்தின் முயற்சிகளை இன்னும் சில நாடுகள் தடுப்பது புதிராக இருப்பதாக அஹ்மட் பைசல் கூறினார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset