நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கிள்ளான் பள்ளத்தாக்கில் ஏய்ம்ஸ்ட் கல்லூரி கட்டுவதற்கு அரசாங்கத்திடம் பரிந்துரைக்கப்படும்: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்

புத்ராஜெயா:

கிள்ளான் பள்ளத்தாக்கில் ஏய்ம்ஸ்ட் கல்லூரி கட்டுவதற்கு அரசாங்கத்திடம் பரிந்துரைக்கப்படும்.

மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் இதனை தெரிவித்தார்.

துன் சாமிவேலுவின் மகத்தான திட்டங்களான எம்ஐஇடி, ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகம், டேப் கல்லூரி ஆகியவை இப்போது சமுதாயத்தின் மிகப் பெரிய சொத்தாக உள்ளது.

குறிப்பாக எம்ஐஇடியின் வாயிலாக ஆண்டுதோறும் மாணவர்களுக்கு உதவிகள் வழங்கப்படுகிறது.

இதில் மஇகா உறுப்பினர்களின் பிள்ளைகள் என்று எந்தவொரு பாகுபாடின்றி அனைவருக்கும் உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

அதன் அடிப்படையில் தான் இன்று மாணவர்களுக்கு கல்வி உதவி நிதி வழங்கப்பட்டது. எம்ஐஇடியின் இந்த கல்வி உதவிகள் தொடரும்.

அதே வேளையில் இன்றைய நிகழ்வில் பிரதமர் கலந்து கொண்டது எம்ஐஇடியின் சேவைக்கு கிடைத்த அங்கீகாரமாக கருதப்படுகிறது என்று டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கூறினார்.

ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகம் தற்போது கெடாவில் செயல்பட்டு வருகிறது. 

இதன் தொடர்ச்சியாக ஏய்ம்ஸ்ட் கல்லூரி கிள்ளான் பள்ளத்தாக்கில் கட்டப்பட வேண்டும் என பல கோரிக்கைகள் வந்துள்ளது.

இதன் அடிப்படையில் ஏய்ம்ஸ்ட் கல்லூரி கிள்ளான் பள்ளத்தாக்கில் கட்டுவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படும்.

இது குறித்து அரசாங்கத்திடம் பரிந்துரைக்கப்படும் என்று டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset