நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கடந்த காலத் தவறுகளிலிருந்து  மலேசியா ஏர்லைன்ஸ் நிறுவனம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்: பிரதமர் அன்வார்

சிப்பாங்: 

மலேசியா ஏர்லைன்ஸ் தனது கடந்த கால தவறுகளிலிருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம்ம் நினைவூட்டியுள்ளார்.

அழகான கட்டட அமைப்பு மற்றும் பெரிய அலுவலகங்களை விட நல்ல நிர்வாகமும் நேர்மையும் தான் ஒரு நிறுவனத்தின் மதிப்பை உயர்த்துவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

1990-ஆம் ஆண்டுகளில் தான் நிதியமைச்சராக இருந்தபோது, மலேசியா ஏர்லைன்ஸ் தனியார்மயப்படுத்தப்படுவதில் வெளிப்படைத்தன்மை இல்லாததால் ஏற்படக்கூடிய ஆபத்துகள் குறித்து எச்சரிக்கையாக இருந்ததாக அன்வார் கூறினார்.

தற்போது மடானி நிர்வாகத்தின் கீழ், நல்லாட்சி மற்றும் தெளிவான பார்வையின் அவசியத்தைத் தாம் பலமுறை வலியுறுத்தியுள்ளதையும் பிரதமர் குறிப்பிட்டார். 

மேலும், தெளிவான நிர்வாகத்தில் கவனம் செலுத்துவதோடு மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் கடந்த கால அனுபவங்களிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டும் என்றார் பிரதமர். 

இந்த விமானத்தைச் சரியாக நிர்வகித்தால், இந்த விமான நிறுவனத்தின் கண்ணியத்தை உயர்த்த முடியும் என்பதை தேசம், மக்கள் மற்றும் சர்வதேச சமூகத்திற்கு நிரூபிக்க முடியும் என்றார். 

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset