நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

உ.பி.யில் ஆசிரியரால் தாக்கப்பட்டு தலித் மாணவர் சாவு

லக்னோ:

உத்தர பிரதேசத்தில் பள்ளி ஆசிரியரால் தாக்கப்பட்ட 15 வயது தலித் மாணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

உத்தர பிரதேச மாநிலம் ஒளரையாவில் 10ஆம் வகுப்பு படித்து வந்தவர் நிகில் குமார். தலித் மாணவரான இவர், பரிசோதனை முறையில் நடத்தப்பட்ட சமூக அறிவியல் தேர்வில் தவறு செய்துள்ளார்.

இதனால் அவரின் சமூக அறிவியல் ஆசிரியர் அஸ்வினி சிங், நிகில் குமாரை கடுமையாக தாக்கியதாக தெரிகிறது.

கடந்த 7ஆம் தேதி நடைபெற்ற இந்தச் சம்பவத்தில் மாணவர் பலத்த காயமடைந்து பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றார். இந்நிலையில், அவர் உடல்நிலையில் முன்னேற்றமின்றி திங்கள்கிழமை உயிரிழந்தார்.

இதையடுத்து நிகில் குமார் படித்த பள்ளி முன்பாக உள்ளூர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்த தகவலின் அடிப்படையில், மாவட்ட ஆட்சியரும், காவல் துறையினரும் சம்பவ இடத்துக்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்த முயன்றனர். ஆனால் காவல் துறை வாகனத்துக்குத் தீ வைத்த போராட்டக்காரர்கள், மாவட்ட ஆட்சியரின் காரையும் சேதப்படுத்தினர். அங்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாரு நிகம் சென்ற பின்னர், நிலைமை கட்டுக்குள் வந்தது.

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset