நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

இந்திய விமானப் போக்குவரத்துத் துறையில் இரு புதிய விமான நிறுவனங்களுக்கு ஒன்றிய அரசு அனுமதி

டெல்லி: 

இந்திய விமானப் போக்குவரத்துத் துறையில் போட்டியை அதிகரிக்கும் வகையில், இரு புதிய விமான நிறுவனங்களுக்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 

Al Hind Air, FlyExpress ஆகிய இரு புதிய விமான நிறுவனங்களுக்கு ஒன்றிய அரசு தடையில்லாச் சான்றிதழ்களை வழங்கியது. 

2024ல் தடையில்லாச் சான்றிதழ் பெற்றிருந்த Shankh Air நிறுவனம், விரைவில் தனது சேவைகளை தொடங்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் இந்தியாவின் மிகப்பெரிய விமான நிறுவனமான இண்டிகோ, பணியாளர் சுழற்சி முறை, விமானிகள் பற்றாக்குறை காரணமாக கடும் நெருக்கடியைச் சந்தித்தது. இதனால் ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டு, லட்சக்கணக்கான பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

தற்போது இந்திய விமானச் சந்தையில் 90 சதவீதத்திற்கும் அதிகமான பங்குகளை இண்டிகோ, ஏர் இந்தியா ஆகிய இரு நிறுவனங்களே வைத்துள்ளன. 

இத்தகைய சூழலில், ஒரு நிறுவனத்தில் ஏற்படும் பாதிப்பு ஒட்டுமொத்தப் போக்குவரத்தையும் முடக்குவதைத் தவிர்க்க, புதிய நிறுவனங்களை ஊக்குவிக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset