செய்திகள் இந்தியா
திருப்பதி கோவில் காணிக்கையில் ரூ.100 கோடி மோசடி செய்தவர்: விரைவில் தீர்ப்பு
திருமலை:
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்கள் செலுத்தும் காணிக்கை பணத்தை எண்ணும் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வந்த முன்னாள் தேவஸ்தான ஊழியர் ரவிக்குமார் என்பவர் பல ஆண்டுகளாக ரூ.100 கோடி வரை திருடியது தெரியவந்தது.
பின்னர் லோக் அதாலத் தீர்வு மூலம் ரூ.40 கோடி மதிப்பிலான சொத்துகளை தேவஸ்தானத்துக்கு எழுதி வாங்கப்பட்டது.
ஆந்திராவில் முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆட்சி வந்ததும், மேல்முறையீடு செய்யப்பட்டு வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
நீதிமன்ற உத்தரவின்படி குற்றம் சாட்டப்பட்ட ரவிக்குமார் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் சொத்துக்கள் குறித்த இடைக்கால அறிக்கையை (ஊழல் தடுப்புப் பிரிவு) டி.ஜி. ஆந்திர மாநில உயர் நீதிமன்றத்தில் நேற்று சமர்ப்பித்தார்.
இந்த அறிக்கையைப் பெற்ற ஆந்திர உயர் நீதிமன்றம், அதை விரிவாக ஆராய்ந்த பிறகு பொருத்தமான உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் என தெரிவித்துள்ளது.
மேலும் இந்த வழக்கின் அடுத்த விசாரணையை ஆந்திர உயர் நீதிமன்றம் வரும் 2026ம் ஆண்டு ஜனவரி 5க்கு ஒத்தி வைத்துள்ளது. விரைவில் இது குறித்து தீர்ப்பு வெளியாக இருக்கிறது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
December 26, 2025, 4:13 pm
பான் அட்டை வைத்திருப்பவர்கள், ஆதார் அட்டையுடன் இணைக்க டிச. 31ஆம் தேதியே கடைசி நாள்: இந்திய அரசு அறிவிப்பு
December 26, 2025, 12:19 pm
இந்தியாவில் ரயில் கட்டணம் இன்று முதல் உயர்கிறது
December 24, 2025, 8:54 pm
இந்திய விமானப் போக்குவரத்துத் துறையில் இரு புதிய விமான நிறுவனங்களுக்கு ஒன்றிய அரசு அனுமதி
December 22, 2025, 12:29 pm
ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் 420 பவுன் எடை கொண்ட தங்க அங்கி ஊா்வலம் நாளை செவ்வாய்க்கிழமை புறப்படுகிறது
December 21, 2025, 11:30 am
இந்தியாவில் விரைவு ரயில் மோதி 8 யானைகள் உயிரிழந்தன: 5 பெட்டிகள் தடம் புரண்டன
December 20, 2025, 5:08 pm
பிரதமர் மோடியின் கூட்டத்துக்கு சென்ற 4 பாஜக தொண்டர்கள் ரயில் மோதி பலி
December 16, 2025, 8:38 pm
