செய்திகள் இந்தியா
பான் அட்டை வைத்திருப்பவர்கள், ஆதார் அட்டையுடன் இணைக்க டிச. 31ஆம் தேதியே கடைசி நாள்: இந்திய அரசு அறிவிப்பு
புதுடெல்லி:
நாட்டில் உள்ள பெரும்பாலானோர் தங்களது ஆதார் மற்றும் பான் எண் இணைப்பு நடவடிக்கையை ஏற்கனவே முடித்திருப்பார்கள். ஆனல், இதுவரை செய்யாதவர்களுக்கு, 2025 டிசம்பர் 31 கடைசி நாள்.
இந்திய வருமான வரித்துறை, பான் கார்டு வைத்திருக்கும் அனைவரும் தங்களது ஆதார் கார்டுடன் பான் எண்ணை இணைத்து விட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுளள்து. இதற்கான கடைசி தேதி டிச. 31, 2025 ஆகும்.
ஆனால், இதற்குள் ஆதார் அட்டையுடன் பான் எண்ணை இணைக்கத் தவறினால் உங்களது பான் எண் செயல்படாததாக மாறிவிடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆதார் எண்ணுடன் பான் எண்ணை (நிரந்தர கணக்கு எண்) இணைக்க ஒன்றிய அரசு பல முறை காலக்கெடுவை நீட்டித்துள்ள நிலையில், இதுவே கடைசி முறை என்று கூறப்படுகிறது.
அது மட்டுமல்லாமல், இதுவரை ஆதார் எண்ணுடன் பார் எண்ணை இணைக்காதவர்கள் தற்போது இணைக்கும் முன் அதற்குரிய அபராதமாக ரூ.1000 செலுத்த வேண்டும். அதே வேளையில், 2024ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 1ஆம் தேதிக்குப் பிறகு, பான் அட்டை வாங்கியவர்கள், டிச. 31ஆம் தேதி வரை இலவசமாகவே ஆதார் அட்டையுடன் இணைத்துக் கொள்ளலாம்.
பான் எண்ணை இணைக்காவிட்டால் என்னவாகும்?
ஆதார் எண்ணுடன் இணைக்கப்படாத பான் எண் செல்லாததாகிவிடும்.
அதனால், ஒருவர் செலுத்திய வரி மற்றும் வரி பிடித்தங்கள் மீண்டும் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்து பெற முடியாது.
ஏற்கனவே பிரிவு எக்ஸ்விஜேஜே-பி மற்றும் எக்ஸ்விஜேஜே-பிபி-ன் கீழ் ஒருவர் வரி செலுத்தி வந்தால், பான் எண் செல்லாததாக மாறும்போது, இனி முறையே 206ஏஏ மற்றும் 206சிசி -ன் கீழ் அதிக வரி பிடித்தம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
December 26, 2025, 12:19 pm
இந்தியாவில் ரயில் கட்டணம் இன்று முதல் உயர்கிறது
December 24, 2025, 8:54 pm
இந்திய விமானப் போக்குவரத்துத் துறையில் இரு புதிய விமான நிறுவனங்களுக்கு ஒன்றிய அரசு அனுமதி
December 22, 2025, 12:29 pm
ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் 420 பவுன் எடை கொண்ட தங்க அங்கி ஊா்வலம் நாளை செவ்வாய்க்கிழமை புறப்படுகிறது
December 21, 2025, 11:30 am
இந்தியாவில் விரைவு ரயில் மோதி 8 யானைகள் உயிரிழந்தன: 5 பெட்டிகள் தடம் புரண்டன
December 20, 2025, 5:08 pm
பிரதமர் மோடியின் கூட்டத்துக்கு சென்ற 4 பாஜக தொண்டர்கள் ரயில் மோதி பலி
December 16, 2025, 8:38 pm
சபரிமலையில் தரமற்ற உணவு வினியோகம்: பம்பையில் உணவு பாதுகாப்பு துறையினர் அதிரடி சோதனை
December 16, 2025, 1:04 pm
