நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அந்நியத் தொழிலாளர் பற்றாக்குறை: பக்காத்தான் அரசாங்கமும் ஒரு காரணம்: டத்தோஸ்ரீ எம்.சரவணன்

கோலாலம்பூர்:

நாட்டில் தற்போது நிலவும் அந்நியத் தொழிலாளர் பற்றாக்குறை நெருக்கடிக்கு பக்காத்தான் அரசாங்கமும் ஒரு முக்கிய  காரணம் என மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, டிஏபி கட்சித் தலைவர்கள் இதற்கு பொறுப்பேற்க வேண்டும் என அவர் குற்றம்சாட்டி உள்ளார்.

கடந்த 2019ஆம் ஆண்டு, வங்க தேசத்தில் இருந்து தொழிலாளர்களைத் தருவிப்பதற்கு அப்போதைய பக்காத்தான் அரசு தடை விதித்தது என்றும் அப்போது, கொரோனா தொற்றுப்பரவல் தொடங்கிவில்லை என்றும் செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

"இச் சமயம் வங்க தேசத்துடனான ஒப்பந்தம் ஒன்று முடிவுக்கு வந்துவிட்டது. ஆனால், பக்காத்தான் ஆட்சிக்காலத்தில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம்கூட கையெழுத்தாகவில்லை. மேலும், ஒரு ஒப்பந்தம்கூட புதுப்பிக்கப்படவில்லை.

"ஒரு ஒப்பந்தத்தைப் புதுப்பிக்க இரண்டு மாதங்களை எடுத்துக்கொள்ளக் கூடாது," என்றார் அமைச்சர் சரவணன்.

பக்காத்தான் அரசாங்கம் 22 மாதங்கள் ஆட்சியில் நீடித்ததையே அவர் மறைமுகமாக சுட்டிக் காட்டினார்.

சைம் டார்பி, FGV போன்றவை எந்தவிதப் புகாரும் எழுப்பியதாகத் தெரியவில்லை என்று குறிப்பிட்ட அவர், டிஏபி மூத்த தலைவர் லிம் குவான் யங் முன்வைத்த விமர்சனத்துக்கான பதிலடியாக மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அண்மைக் காலமாக இவ்விருவரும் தங்களுக்குள் சவால் விடுத்த வண்ணம் உள்ளனர்.

அந்நியத் தொழிலாளர் பற்றாக்குறைப் பிரச்சினையை தாம் சரிவரக் கையாளவில்லை என்பதை நிரூபித்துக் காட்டுமாறும் அக்டோபர் 5ஆம் தேதி வரை இதற்கு தாம் அவகாசம் தருவதாகவும் டத்தோ எம்.சரவணன் அண்மையில் தெரிவித்திருந்தார்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset