செய்திகள் மலேசியா
மேற்கு ஆசிய மோதல்: நாட்டின் உள்நாட்டு விமான சேவைகள் பாதிக்கப்படவில்லை: போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக்
புத்ராஜெயா:
மேற்கு ஆசியாவில் நிலவும் மோதல்கள் தற்போது நாட்டின் உள்நாட்டு விமானப் பயணங்களைப் பாதிக்கவில்லை என்று போக்குவரத்து அமைச்சர் அண்டனி லோக் முகநூலில் தெரிவித்துள்ளார்.
இதுவரை எந்த உள்நாட்டு விமான சேவையும் ரத்து செய்யப்படவில்லை. அதற்கு மாறாக, வரவிருக்கும் ஹரிராயா பெருநாள் காலத்தை முன்னிட்டு கூடுதல் விமான சேவைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
“எந்த விமானமும் ரத்து செய்யப்படவில்லை. ஹரிராயா காலத்தை முன்னிட்டு கூடுதல் விமானங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. ஆபத்து நிலை உள்ள பகுதிகளை மட்டுமே ரத்து செய்யப்பட்டுள்ளன,” என்று அவர் இன்று அமைச்சகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
அந்த நிகழ்ச்சியில் சாலை போக்குவரத்து துறை (JPJ) தலைவர் டத்தோ ஏடி ஃபட்லி ரம்லி உட்பட போக்குவரத்து அமைச்சின் பொதுச் செயலாளர் டத்தோ ஸ்ரீ ஜனா சந்திரன் முனியன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
“விமான நிறுவனங்கள் வழக்கம்போல் செயல்பட வேண்டும் என்பதே அரசின் விருப்பம். எனவே, இந்தத் துறையில் ஏற்படும் செலவுச் சுமையைக் குறைக்க அரசால் வழங்கக்கூடிய உதவிகள் குறித்து தேசிய பொருளாதார நடவடிக்கை கவுன்சிலுக்கு (MTEN) அமைச்சகம் பரிந்துரைகளைச் சமர்ப்பிக்கவுள்ளது,” என்று அவர் கூறினார்.
மேலும், மேற்கு ஆசிய மோதல்கள் காரணமாக அந்தப் பகுதிகளில் உள்ள விமான நிறுவனங்கள் பல சேவைகளை நிறுத்தியுள்ளதால், ஐரோப்பா போன்ற இடங்களுக்குப் பயணிக்கும் பயணிகளின் தேவையைப் பூர்த்தி செய்யும் வாய்ப்பு பிற விமான நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ளதாக லோக் குறிப்பிட்டார்.
அவர் கூறியதாவது, தற்போது பெரும்பாலான மேற்கு ஆசிய விமான நிறுவனங்கள் தங்கள் வழக்கமான சேவைகளை நிறுத்தியுள்ளன; அவை குடிமக்களை தாய்நாட்டிற்கு திருப்பி அனுப்பும் ரிபாட்ரியேஷன் பயணங்களுக்காக மட்டுமே இயங்குகின்றன.
இதனால், ஐரோப்பா போன்ற இடங்களுக்குச் செல்லும் பயணிகளின் தேவையைப் பூர்த்தி செய்ய உள்ளூர் விமான நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
“முன்பு ஐரோப்பாவுக்கு செல்ல பலர் மேற்கு ஆசிய விமான நிறுவனங்களைப் பயன்படுத்தினர். தற்போது அந்தப் பகுதி போர் நிலைமையில் இருப்பதால் விமான சேவைகள் குறைந்துள்ளன; கட்டணங்களும் அதிகரித்துள்ளன.
இதனால், அந்தத் தேவையைப் பூர்த்தி செய்ய உள்ளூர் விமான நிறுவனங்களுக்கு வாய்ப்பு உருவாகியுள்ளது. உதாரணமாக மலேசியா ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு லண்டன், பாரிஸ் போன்ற இடங்களுக்கு அதிகமான பயணிகள் தேவை உருவாகியுள்ளது,” என்று அவர் தெரிவித்தார்.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
March 16, 2026, 6:43 pm
ஜம்ரி வினோத் மீது நாளை குற்றம் சாட்டப்படும்
March 16, 2026, 6:42 pm
தமீம் டஹாரி மீது நாளை லங்காவி நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும்: ஐஜிபி
March 16, 2026, 6:41 pm
பேரா சுல்தான் நஸ்ரின் ஷாவை மரியாதை நிமித்தமாக டத்தோஶ்ரீ ரமணன் சந்தித்தார்
March 16, 2026, 6:01 pm
நான்கு நாள்களில் டாங்கக் மாவட்டத்தில் இரண்டாவது கொலை சம்பவம்
March 16, 2026, 6:00 pm
நோன்புப் பெருநாள் காலத்தில் மலேசியாவின் வானிலை: MetMalaysia முன்னறிவிப்பு
March 16, 2026, 5:30 pm
டாம் ஜெபட்டுக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கில் சைஃபுதின் நஸுத்தியான் வெற்றி
March 16, 2026, 4:26 pm
சிக்கன செலவினம்: கிளந்தான் UMNO மாநில அளவிலான ஹரிராயா நிகழ்ச்சியை ரத்து செய்தது
March 16, 2026, 4:25 pm
