நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பேரா சுல்தான் நஸ்ரின் ஷாவை மரியாதை நிமித்தமாக டத்தோஶ்ரீ ரமணன் சந்தித்தார்

கோலாலம்பூர்:

பேரா சுல்தான், சுல்தான் நஸ்ரின் ஷாவை  மனிதவள அமைச்சர் டத்தோஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் மரியாதை நிமித்தமாகா சந்தித்தா.

தலைநகரிலுள்ள இஸ்தானா பேராக்கில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

இந்தச் சந்திப்பின் போது, பேரா மாநிலத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் பெர்கேசோ மறுவாழ்வு மையத்தின் தற்போதைய கட்டுமானப் பணிகள், அதன் நிலை குறித்த விளக்கவுரையை சுல்தானின் மேலான பார்வைக்கு அவர் சமர்ப்பித்தார்.

அத்துடன், இந்த மறுவாழ்வு மையத்திற்குப் பொருத்தமான பெயர் சூட்டுவது குறித்தும், இம்மையத்தை அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைப்பதற்காக, சுல்தான் அவர்கள் திருவுள்ளம் கனிந்து வருகை தரும் தேதி குறித்தும் இதன்போது அவர் விழைந்து கேட்டுக்கொண்டார்.

மக்களுக்குப் பயனளிக்கும் இத்தகைய திட்டங்கள் மற்றும் முன்முயற்சிகள் மீது சுல்தான் அவர்கள் காட்டிய ஆழ்ந்த அக்கறைக்கும், தமக்குச் சந்திப்பு வழங்கியமைக்கும் டத்தோஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தனது சிரம் தாழ்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார்.

மக்களின் நல்வாழ்வையும் நாட்டின் சுபிட்சத்தையும் கருத்தில் கொண்டு வகுக்கப்படும் ஒவ்வொரு திட்டமும் செம்மையாகச் செயல்படுத்தப்படுவதற்கு, சுல்தான்  வழங்கிய ஆலோசனைகளும் மேலான கருத்துகளும் மிகச் சிறந்த வழிகாட்டியாக அமையும் என்று அவர் தனது அதிகாரப்பூர்வ முகநூல் பதிவு வழி உறுதிபடக் கூறினார்.

இந்தச் சந்திப்பின் போது பேரா மாநில இஸ்லாமிய சமய - மலாய் கலாச்சார மன்றத்தின் தலைவர் டான்ஸ்ரீ டத்தோஸ்ரீ முகமட் அனுவார் பின் சைனி, மனிதவள அமைச்சின் துணைச் செயலாளர் டாக்டர் ஹாஜி முகமட் ஷாஹரின் பின் உமார், பெர்கேசோ வாரியத் தலைவர் டத்தோஸ்ரீ சுபஹான் கமல், பெர்கேசோ தலைமை நிர்வாக அதிகாரி டத்தோஸ்ரீ டாக்டர் முகமட் அஸ்மான் பின் அஜிஸ் முகமட், பெர்கேசோ மறுவாழ்வு மையத்தின் நிர்வாக இயக்குநர் டத்தோ டாக்டர் ஹபீஸ் பின் ஹுசைன் ஆகியோர் உடனிருந்தனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset