செய்திகள் மலேசியா
நோன்புப் பெருநாள் காலத்தில் மலேசியாவின் வானிலை: MetMalaysia முன்னறிவிப்பு
கோலாலம்பூர்:
மலேசியா வானிலை துறை (MetMalaysia) இன்று 1447H/2026M ஹரிராயா கொண்டாட்டத்துக்கான மார்ச் 20 முதல் மார்ச் 22 வரை சிறப்பு வானிலை முன்னறிவிப்பை வெளியிட்டுள்ளது.
MetMalaysia இன்று தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையில், மார்ச் 20 அன்று மாலை நேரத்தில் ஒன்பது மாநிலங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என தெரிவித்துள்ளது.
இதில் கெடா, பினாங்கு, பேராக், பஹாங், சிலாங்கூர், நெகிரி செம்பிலான், ஜொகூர், கோலாலம்பூர், புத்ராஜெயா ஆகிய இடங்கள் அடங்கும்.
சபாவில் மேற்குப் கடற்கரை, உள்ளகப் பகுதி உட்பட தவாவ் பகுதிகள், சரவாக்கில் காப்பிட், மீரி, லிம்பாங் பகுதிகள் மழையால் தாக்கப்பட வாய்ப்பு உள்ளது.
பஹாங், சிலாங்கூர், நெகிரி செம்பிலான், கோலாலம்பூர், புத்ராஜெயாவிலும் இரவு நேரத்தில் மழை எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், மார்ச் 21, ஹரிராயா நாளில், மாலை நேரத்தில் சிலாங்கூர், நெகிரி செம்பிலான், சரவாக், கோலாலம்பூர், புத்ராஜெயா ஆகிய இடங்களில் மின்னல், மழைக்கு வாய்ப்பு உள்ளது.
சரவாக் பகுதியில் இது கூச்சிங், சேரியன், சமரஹான், ஸ்ரீ அமான் பகுதிகளைச் உள்ளடக்கியுள்ளது.
மார்ச் 22 அன்று சபாவில் மேற்குக் கடற்கரை, சாண்டக்கான் பகுதிகள், சரவாக் பகுதியில் கூச்சிங், சேரியன், சமரஹான் மற்றும் ஸ்ரீ அமான் பகுதிகளில் இடியுடன் கூடிய மழை எதிர்பார்க்கப்படுகிறது.
MetMalaysia மக்களை ஹரிராயா கொண்டாட்ட காலத்தில் பயணங்களை முன்கூட்டியே திட்டமிடுமாறு அறிவுறுத்தியுள்ளது.
மேலும் வானிலை தொடர்பான தகவல்கள் சமயத்திற்கு உட்பட்ட முறையில் புதுப்பிக்கப்படும் என்றும் இதை MetMalaysia வலைத்தளம், சமூக வலைதளங்களில் பார்வையிடலாம் என்றும் பொதுமக்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
March 16, 2026, 6:43 pm
ஜம்ரி வினோத் மீது நாளை குற்றம் சாட்டப்படும்
March 16, 2026, 6:42 pm
தமீம் டஹாரி மீது நாளை லங்காவி நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும்: ஐஜிபி
March 16, 2026, 6:41 pm
பேரா சுல்தான் நஸ்ரின் ஷாவை மரியாதை நிமித்தமாக டத்தோஶ்ரீ ரமணன் சந்தித்தார்
March 16, 2026, 6:01 pm
நான்கு நாள்களில் டாங்கக் மாவட்டத்தில் இரண்டாவது கொலை சம்பவம்
March 16, 2026, 5:30 pm
டாம் ஜெபட்டுக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கில் சைஃபுதின் நஸுத்தியான் வெற்றி
March 16, 2026, 4:26 pm
சிக்கன செலவினம்: கிளந்தான் UMNO மாநில அளவிலான ஹரிராயா நிகழ்ச்சியை ரத்து செய்தது
March 16, 2026, 4:25 pm
