நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நான்கு நாள்களில் டாங்கக் மாவட்டத்தில் இரண்டாவது கொலை சம்பவம்

தங்காக்: 

இந்த மாவட்டத்தில் மீண்டும் கொலை சம்பவம் ஏற்பட்டுள்ளது. காலை நேரத்தில் ஒரு வியட்நாமிய பெண், தொழிற்சாலையில் கழுத்தில் குத்தப்பட்டு கொல்லப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.

ஆரம்பத்தில், பாதிக்கப்பட்டவரும் சந்தேக நபரும் வேலையிடத்தில் பொதுவாகப் பேசி  கொண்டுள்ளனர்.

“சந்தேக நபர் திடீரென பாதிக்கப்பட்டவரின் கழுத்தை குத்தி தீவிரமாக காயப்படுத்தினார். இதனால் பாதிக்கப்பட்டவர் விழுந்து உயிரிழந்தார்,” என்று தகவல் கூறுகிறது.

மேலும், பாதிக்கப்பட்டவரின் கழுத்தையும் கையையும் குத்திய பிறகு சந்தேக நபர் அவரது கழுத்தையும் கையையும் வெட்டினார், இதனால் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

"சந்தேக நபர் மூவாரில் உள்ள சுல்தானா பாத்திமா சிறப்பு மருத்துவமனைக்கு (HPSF) கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) சிகிச்சை பெற்று வருகிறார்," என்று அவர் கூறினார்.

சம்பவம் நடந்த தொழிற்சாலை சிசிடிவி (CCTV) மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இச்சம்பவம் தொடர்பாக, தங்காக் மாவட்ட காவல் தலைவர் சூப்பிரண்டென்டன் ரொஸ்லான் முஹம்மத் தலிப் சம்பவத்தை உறுதி செய்தார். 

 போலிஸ் விரைவில் சம்பவம் தொடர்பான செய்திக் குறிப்பை வெளியிடும்  என்றார் அவர்.

இந்தக் கொலை சம்பவம், கடந்த நான்கு நாட்களில் நடந்த இரண்டாவது சம்பவமாகும். 

முன்னதாக, 38 வயதுடைய ஒரு ஆண் ஆயுதம் ஏந்திய  மூன்று நபர்களால் வெட்டப்பட்டு உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset