நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நாணயமாற்று வணிகரை கடத்தி பணம் பறித்த வழக்கில் 5 பேருக்கு ஆயுள் தண்டனை


கோலாலம்பூர்:

பினாங்கை சேர்ந்த நாணயமாற்று வணிகரை கடத்தி பணம் பறித்த வழக்கில் இன்று 5 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. 

டி ஷசிதரன், 38, எம் அசோகன், 39, முகமது சுல்தான் அகமது கபில், 43, ஓங் ஷான் சியா, 37, யோ ஷி மிங், 33 ஆகிய ஐந்து பேருக்கும் எதிரான தீர்ப்பை நீதிபதி அக்தர் தாஹிர் வழங்கினார்.

1961 ஆம் ஆண்டு கடத்தல் சட்டம் பிரிவு 3(1) இன் கீழ் அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது.

பாதிக்கப்பட்ட 66 வயதான ஹவசனாஜ்மி கே ஷஹாபுதீன் மீது கடுமையான வன்முறை எதுவும் நடத்தப்படவில்லை என்று நீதிபதி அக்தர் தீர்ப்பளித்ததை அடுத்து, அந்த ஐந்து பேர் தூக்கு தண்டனையிலிருந்து விடுவிக்கப்பட்டு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. 

“ஹவசனாஜ்மி செப்டம்பர் 28, 2016 அன்று பயான் லெபாஸில் கடத்தப்பட்டார். கடத்தப்பட்டவரை கைவிலங்கிடப்பட்டதோடு கடத்தல்காரர்கள் அவரது கட்டை விரலில் காயம் ஏற்படுத்தினார்கள்.  அவரை கடத்தல்காரர்கள் பல நாட்கள் அடைத்து வைத்திருந்தார்கள். அதே நேரத்தில் அவரது குடும்பத்தினரிடம்  RM3 மில்லியன் தொகையை கோரி இருந்தார்கள்.
குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் அவர்கள் கைது செய்யப்பட்ட நாள் முதல் ஆயுள் தண்டனை விதிக்கிறேன்.

“குற்றம் சாட்டப்பட்ட ஒவ்வொருவருக்கும் 10 சவுக்கடி வழங்கும்படி  உத்தரவிடுகிறேன்,'' என்று தீர்ப்பளித்துள்ளார் நீதிபதி.

ஷசிதரன் சார்பில் வக்கீல்கள் கே தங்கஸ்வரன், அந்தோணி சியு, ஆர் தேவ் சந்தர் ஆகியோர் முறையே சசிதரன், அசோகன் மற்றும் முகமது சுல்தான் சார்பில் ஆஜராகி வாதாடினர். ஓங் மற்றும் இயோவை ரவிச்சந்திரன் பிரதிநிதித்துவப்படுத்தினார்.

அரசு துணை வழக்கறிஞர் முனா முகமது ஜாபர் வழக்கு தொடர்ந்தார்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset