நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

யூடியூப் சேனல்களின் விடியோக்கள் முடக்கம்

புது டெல்லி:

பத்து யூடியூப் சேனல்கள் வெளியிட்ட 45 விடியோக்களை இந்திய செய்தி மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் முடக்கியுள்ளது.

இதுதொடர்பாக அந்த அமைச்சகம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சில சமூகத்தினரின் மத உரிமைகளை அரசு பறித்துள்ளதாகவும், இந்தியாவில் உள்நாட்டுப் போர் பிரகடனம் எனவும் பல பொய்யான தகவல்களுடன் யூடியூபில் காணொலிகள் கண்டறியப்பட்டன.

வெவ்வேறு மதத்தினர் இடையே வெறுப்புணர்வை பரப்பும் நோக்கில் இருந்த அந்தப் போலிச் செய்திகள், தொழில்நுட்பம் மூலம் திரிக்கப்பட்ட (மார்ஃபிங்) காணொலிகள்,  நாட்டின் பொது ஒழுங்குக்கு இடையூறை ஏற்படுத்தி மத நல்லிணக்கத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை ஆகும்.

இதுமட்டுமின்றி அக்னிபத் திட்டம், இந்திய ஆயுதப் படைகள், காஷ்மீர் உள்ளிட்டவை தொடர்பாக தவறான தகவல்களைப் பரப்பும் காணொலிகளும் கண்டறிப்பட்டன.

இதுபோல 10 யூடியூப் சேனல்களில் 45 விடியோக்கள் கண்டறியப்பட்டு முடக்கப்பட்டன. அந்தக் காணொலிகளை 1.30 கோடிக்கும் மேற்பட்டவர்கள் பார்த்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

+ - reset