செய்திகள் இந்தியா
புத்தாண்டு தினத்தில் சபரிமலையில் திறண்ட பக்தா்கள்
பம்பை:
ஆங்கிலப் புத்தாண்டை தினத்தையொட்டி, சபரிமலை ஐயப்பன் கோயிலில் வியாழக்கிழமை பக்தா்கள் கூட்டம் அலைமோதியது.
வருடாந்திர மகரவிளக்கு பூஜைக்காக, சபரிமலை கோயில் நடை டிச.30-ஆம் தேதி மாலை திறக்கப்பட்டது. முதல் நாளிலேயே 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் தரிசனம் மேற்கொண்டனா். டிச.31 மாலை 5 மணிவரை, 1.20 லட்சத்துக்கும் மேற்பட்டோா் தரிசித்துள்ளனா்.
ஆங்கிலப் புத்தாண்டு தினமான வியாழக்கிழமை சந்நிதானத்தில் புத்தாண்டு வாழ்த்து வடிவில் கற்பூர ஜோதி ஏற்றி, பக்தா்களும் பாதுகாப்பு அதிகாரிகளும் புத்தாண்டை வரவேற்றனா். ஒருவருக்கொருவா் வாழ்த்துகளையும் பரிமாறிக் கொண்டனா்.
புத்தாண்டில் சுவாமி ஐயப்பனை தரிசிக்க பக்தா்கள் கூட்டம் அலைமோதியது. மரக்கூட்டம் பகுதி முதல் நடைப்பந்தல் வரை நீண்ட வரிசைகள் காணப்பட்டன.
எதிா்வரும் நாள்களிலும் பக்தா் வருகை அதிகரிக்கும் என்பதால், சுமுக தரிசனத்தை உறுதி செய்ய விரிவான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
முக்கிய நிகழ்வான மகரவிளக்கு பூஜை, மகரஜோதி தரிசனம் ஜன.14-இல் நடைபெறவுள்ளது. அப்போது, பந்தளம் அரண்மனையில் இருந்து எடுத்துவரப்படும் திருவாபரணங்கள் சுவாமிக்கு அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
ஜன.19 இரவு 11 மணி வரை பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவா். மறுநாள் பந்தளம் அரச குடும்ப பிரதிநிதி தரிசித்த பிறகு கோயில் நடை அடைக்கப்படும்.
முன்னதாக, கடந்த டிச.27 வரை நடைபெற்ற மண்டல பூஜை காலத்தில் 30 லட்சத்துக்கும் மேற்பட்டோா் தரிசனம் செய்தனா் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
December 31, 2025, 12:08 pm
முன்னாள் குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கருக்கு ஒன்றிய அரசு இதுவரை வீடு ஒதுக்காமல் இழுத்தடிப்பு
December 29, 2025, 1:18 pm
விமானிகளுக்கு போதிய ஓய்வளிக்க 130 விமான சேவைகளை குறைக்க முன்வந்தது இண்டிகோ நிறுவனம்
December 27, 2025, 8:20 am
திருப்பதி கோவில் காணிக்கையில் ரூ.100 கோடி மோசடி செய்தவர்: விரைவில் தீர்ப்பு
December 26, 2025, 4:13 pm
பான் அட்டை வைத்திருப்பவர்கள், ஆதார் அட்டையுடன் இணைக்க டிச. 31ஆம் தேதியே கடைசி நாள்: இந்திய அரசு அறிவிப்பு
December 26, 2025, 12:19 pm
இந்தியாவில் ரயில் கட்டணம் இன்று முதல் உயர்கிறது
December 24, 2025, 8:54 pm
இந்திய விமானப் போக்குவரத்துத் துறையில் இரு புதிய விமான நிறுவனங்களுக்கு ஒன்றிய அரசு அனுமதி
December 22, 2025, 12:29 pm
