நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் சிந்தனைகள்

By
|
பகிர்

தம்பூன் நாடாளுமன்ற வேட்பாளர் அன்வார் என்றால் தேசிய முன்னணி வெற்றி மிகப்பெரிய கேள்விக்குறியாகும் - கள அரசியல் நிலவரம்  

தம்பூன்:

தம்பூன் நாடாளுமன்ற வேட்பாளராக டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் போட்டியிடுவாரேயானால் அவருக்கான வெற்றி வாய்ப்பு எளிதாகலாம் என தம்பூன் அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டுவரும் சூடான அரசியல் தகவலாகியுள்ளது.

தம்பூன் தொகுதியை பொறுத்தவரை சுமார் 80 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்காளர்களை கொண்ட தொகுதியாகும்.

இங்கு மஞ்சோய்(manjoi) உலுகிந்தா ஆகிய இரண்டு சட்டமன்ற  தொகுதிகள் உள்ளடக்கிய தொகுதி ஆகும்.

கடந்த 2018, 14ஆவது பொதுத்தேர்தலில் தம்பூன் நாடாளுமன்ற தொகுதியில் டத்தோஸ்ரீ அஹமத் ஃபைசால் பக்கத்தான் ராயாட் கூட்டணி  (PH) வேட்பாளராக நிறுத்தப்பட்டு வெற்றிப்பெற்றார்.

மேலும், பேரா செண்டிரியாங் சட்டமன்ற வேட்பாளராகவும் போட்டியிட்டு அங்கும் வெற்றிப் பெற்று பேரா மந்திரி பெசாராகவும் பி கேஆர், டிஏபி, அமானா ஆகிய கட்சிகளின் பலத்த ஆதரவோடு பதவி ஏற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

சுமார் 22 மாதங்களுக்கு பிறகு ஏற்பட்ட அரசியல் ஆட்டத்தில் பேரா தேசிய முன்னணி தலைவர் டத்தோஸ்ரீ சரானி மந்திரி பெசார் ஆனார்.

தம்பூன் நாடாளுமன்ற உறுப்பினரான அஹமத் ஃபைசல் மத்திய அமைச்சரானார்.

தம்பூன் நாடாளுமன்ற தொகுதியை பொறுத்தவரை 5 தவணைகளாக டத்தோஸ்ரீ ஹுஸ்னி அனாட்ஸ்லா நாடாளுமன்ற உறுப்பினராகவும், நிதி அமைச்சராகவும் இருந்தார். அவரது காலத்தில் தம்பூன் தொகுதி மிகுந்த முன்னேற்றத்தைக் கண்டது. அனைத்து இன மக்களின் மிகுந்த அன்பையும் பெற்றவராக அவர் திகழ்ந்தார்.

ஆளும் கட்சிகள் மட்டுமின்றி எதிர்க்கட்சிகள் கொண்டு செல்லும் பிரச்சனைகளையும் கட்சி பேதமின்றி தீர்த்து வைத்து அனைவரிடத்திலும் நற்பெயர் கொண்டு விளங்கினார். இங்கு அனைத்து கட்சியினரும், மக்களும் ஏற்கும் நிலையை அவர் உருவாக்கி வைத்திருந்தார்.

ஆனாலும் 2018 தேர்தலில் நாட்டில் ஏற்பட்ட அரசியல் சுனாமியால்  அவர் தோல்வியைத் தழுவினார்.

2018க்கு பிறகு தம்பூன் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரின் கவனம் இல்லாமல் தத்தளிக்கும் நிலை ஏற்பட்டு விட்டது என அனைத்து இன மக்களும் புலம்பும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் 15ஆவது பொதுத்தேர்தலில் பி கேஆர் கட்சியின் தேசியத்தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹீம் இங்கு தொகுதி மாறி போட்டியிடுவாரேயானால் அவரது வெற்றி உறுதியென தம்பூன் அரசியல் வட்டாரங்கள் தெளிவாக ஆதாரங்கள் தருகின்றன.

நடப்பு

நாடாளுமன்ற உறுப்பினரின் மக்கள் சந்திப்பு உட்பட அனைத்து நடவடிக்கைகளும் முடக்க நிலைக்கு தள்ளப்பட்ட சூழல் ஏற்பட்டுள்ளது.

அதே சமயத்தில் எதிர்வரும் பொதுத்தேர்தலில் நடப்பு நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ அஹமத்  ஃபைசல் எதிர்வரும் பொதுத்தேர்தலில் தம்பூன் தொகுதியில் போட்டியிட மாட்டார் என்றும் அவர் வேறு தொகுதியை தேடி போகலாம் என்றும் உறுதியான ஓர் ஆருடமும் நிலவுகிறது.

காரணம் தம்பூன் நாடாளுமன்ற வேட்பாளராக அம்னோவை சேர்ந்த முன்னாள் உலுகிந்தா சட்டமன்ற உறுப்பினரும் தம்பூன் டிவிஷன் தேசிய முன்னணி தலைவருமான டத்தோ அமினுடின் போட்டியிட ஆயத்தமாகி உள்ளார். அவர் ஒரு பக்கம் தொகுதி முழுக்க சுற்றி வந்து கொண்டிருக்கிறார்.

மேலும் இந்தத் தொகுதி அம்னோவின் பாரம்பரிய தொகுதி என்பதால் 15 ஆவது பொதுத்தேர்தலில்  அம்னோ தம்பூனில் மீண்டும் களமிறங்கவிருப்பது உறுதியாகியுள்ளது.

அன்வார் இப்ராஹீம் இங்கு களமிறங்குவாரேயானால் அவர் எதிரணிக்கு கடும் அறைகூவலாக இருப்பார். 

இயல்பாகவே அவர் வாக்காளர்களை தனது வசீகர பேச்சால் எளிதில் கவர்பவர். மலாய்க்காரர்கள் வாக்குகள் ஒரு புறம் இருந்தாலும் சீனர்களிடையேயும் இந்தியர்களிடையேயும் அன்வாருக்கு மிகப்பெரும் செல்வாக்கு இருக்கிறது.

கெஅடிலான் தலைவர் டத்தோஸ்ரீ அன்வாரை எதிர்த்து தாம் போட்டியிடத் தயார் என்று இளைஞர் விளையாட்டுத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அஹ்மத் ஃபைசல் அஸுமு மீண்டும் இன்று கூறியுள்ளார். 

ஆனால், கள நிலவரம் வேறு மாதிரியாக உள்ளது,

அன்வார் இங்கு போட்டியிட்டால் இது ஒரு நட்சத்திர தொகுதியாக நாடு முழுவதும் முக்கியமாக நோக்கப்படும். ஒருக்கால் அன்வார் பிரதமரானால், பிரதமரின் தொகுதி என்ற செல்வாக்கும் சேர்ந்துவிடும் என்றும் மக்கள் கருதலாம்.

எது எப்படி இருப்பினும் வெற்றிப் பெறும் வாய்ப்புக்கு கடுமையான போட்டி நிலவும் என்பதில் தம்பூன் அரசியல்வாதிகளின் குரலாக ஒலிக்க தொடங்கியிருக்கிறது.

- பேராக் புகழேந்தி 

தொடர்புடைய செய்திகள்

+ - reset