நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நஜீப்பின் வழக்கறிஞர்கள் வாதங்களை தொடர வேண்டும்

புத்ராஜெயா:

எஸ்ஆர்டி வழக்கின் நஜீப் வழக்கறிஞர்கள் தங்களின் வாதங்களை தொடர வேண்டும்.
எஸ்ஆர்சி வழக்கில் தமக்கு எதிரான தண்டனைகளை எதிர்த்து டத்தோஸ்ரீ நஜீப் வழக்காடி வருகிறார்.

கூட்டரசு நீதிமன்றத்தில் 5 நீதிபதிகள் அடங்கிய குழுவின் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

அரசு வழக்கறிஞரான வி. சிதம்பரம் தமது தரப்பு வாதக்களை நிறைவு செய்தார். இனி நஜீப் தரப்பின் வாதங்கள் தொடர வேண்டும்.

ஆனால், நஜீப்பிற்கு ஆதரவாக வாதாடவிருந்த ஹிஷாம் தே போ தெய்க் இந்த வழக்கில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

அதே வேளையில் அவர் தலைமையிலான வழக்கறிஞர் நிறுவனத்தின் சேவையை தாம் நிறுத்திக் கொள்வதாக நஜீப் அறிவித்துள்ளார்.

இதனால், நஜீப் சார்பில் வாதாட போவது யார் என்ற கேள்விகளும் பரவலாக எழுந்துள்ளது.

அதே வேளையில் நஜீப் சார்பாக வாதாட ஹிஷாம் தே போ தெய்க்கிற்கு கூட்டரசு நீதிமன்றம் தொடர்ந்து வாய்ப்புகளை வழங்கி உள்ளது.

அடுத்த செவ்வாய்க்கிழமை நஜீப் தரப்பு வாதம் தொடங்கவுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

+ - reset