நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜொகூர் கிழக்குப் பகுதியில் தொடர் மழை எச்சரிக்கை: மெட் மலேசியா அறிவிப்பு 

கோலாலம்பூர்:

ஜோகூர் மாநிலத்தில் இடியுடன் தொடர்ந்து மழை பெய்யும் என  அபாய எச்சரிக்கையை மலேசியா வானிலைத் துறை (Met Malaysia) வெளியிட்டுள்ளது. 

இது கிழக்கு கரையிலும் ஜொகூர் மாநிலத்திலும் 25 டிசம்பர் முதல் தொடங்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

மலேசியா வானிலைத் துறை இன்று வெளியிட்ட அறிக்கையில், திராங்கானுவும்  கிளந்தானும் கடுமையாக பாதிக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளது. 

இதில் தும்பட், பாசிர் மாஸ், கோத்த பாரு, பச்சோக், மச்சாங், பாசிர் புதே ஆகிய பகுதிகள் 25 முதல் 28 டிசம்பர் வரை கடுமையாக மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது.

டிசம்பர் 26 முதல் 29 வரை பகாங் மாநிலத்தில் ஜெராண்டுட், மாறான், குவாந்தான், பெக்கான், ரோம்பின் பகுதிகள் தாக்கப்படலாம். அதே காலகட்டத்தில் ஜொகூர் மாநிலத்தில் செகாமட், குளுவாங், மெர்சிங், கோத்த திங்கி ஆகிய பகுதிகள் கடும் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- கிருத்திகா
 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset