நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தேசிய முன்னணியின் வீழ்ச்சிக்கு நூர் ஜஸ்லான் போன்றவர்களே காரணம்: சரவணன் சாடல்

காஜாங்:

தேசிய முன்னணியின் வீழ்ச்சிக்கு நூர் ஜஸ்லான் போன்றவர்களே காரணம் என்று மனிதவள அமைச்சரும் மஇகா துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ எம். சரவணன் சாடியுள்ளார்.

நாட்டின் 15ஆவது பொதுத் தேர்தலில் மஇகாவும் மசீசவும் தேசிய முன்னணிக்கு பெரிய வெற்றியை தேடித் தரும் என அம்னோ எதிர்பார்க்கவில்லை.

அக் கட்சிகள்தான் தேசிய முன்னணியை நம்பியிருக்கின்றன என்று நூர் ஜஸ்லான் அண்மையில் முகநூலில் கருத்து ஒன்றை பதிவேற்றம் செய்துள்ளார்.

இவ்விவகாரம் குறித்து பேசிய டத்தோஸ்ரீ சரவணன், கடந்த 14ஆவது பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி மிகப் பெரிய வீழ்ச்சியை சந்தித்தது. ஆட்சியையும் இழந்தது.

அந்த வீழ்ச்சியின் அனுபவங்களை நூர் ஜஸ்லான் போன்றவர்கள் உணரவில்லை.
அதே வேளையில் தேசிய முன்னணியின் வீழ்ச்சிக்கு நூர் ஜஸ்லான் போன்றவர்கள்தான் காரணமாக உள்ளனர்.

அம்னோ, மஇகா, மசீச ஆகிய கட்சிகள் சேர்ந்தது தான் தேசிய முன்னணி. இதில் மஇகாவும், மசீசவும் இல்லை என்றால் தேசிய முன்னணியும் இல்லை என்று அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset