நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

இந்தியாவில் டிரம்பின் 36 மணி நேர பயணத்துக்கு ரூ.38 லட்சம் செலவு

புது டெல்லி:

இந்தியாவில் 2020ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மேற்கொண்ட 36 மணி நேர அரசு முறைப்பயணத்துக்கு சுமார் ரூ.38 லட்சம் செலவானதாக தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் தெரியவந்துள்ளது.

மிஷல் பாதினா என்பவர் கேட்ட கேள்விக்கு வெளியுறவு அமைச்சகம் இந்த பதிலை அளித்துள்ளது. 2020யிலேயே அவர் கேட்ட இந்த கேள்விக்கு பதில் கிடைக்காததையடுத்து, மத்திய தகவல் ஆணையத்தில் மேல் முறையீடு செய்து இந்த பதிலைப் பெற்றுள்ளார்.  

2020, பிப்ரவரி 24ஆம் தேதி தில்லிக்கு குடும்பத்துடன் வந்த டிரம்ப், குஜராத் மாநிலம் அகமதாபாதில் மூன்று மணி நேரம் பேரணி மேற்கொண்டு, மொடேரா கிரிக்கெட் விளையாட்டு அரங்கில் லட்சக்கணக்கானோர் கூடிய நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில் பிரதமர் மோடியுடன் பங்கேற்றார்.

அப்போது குஜராத்தில் குடிசைப் பகுதிகள் அனைத்தும் வெள்ளை திரையிட்டு மறைக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

அன்றைய தினமே ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலுக்கு சென்றுவிட்டு மறுநாள் தில்லியில் பிரதமர் மோடியுடன் இருநாட்டு நல்லுறவு பேச்சுவார்த்தை நடத்திவிட்டு அமெரிக்கா திரும்பினார்.

Will Mr Modi hold another 'Namaste Trump!' rally: Chidambaram

அமெரிக்கத் தேர்தலில் அங்குள்ள இந்தியர் வம்சாவளிகளின் வாக்குகளைப் பெற டிரம்ப் மேற்கொண்ட இந்த முயற்சி அவருக்கு தோல்வியை ஏற்படுத்தியது.

ட்ரம்பின் வருகைக்காக குஜராத் விளையாட்டரங்கில் லட்சக்கணக்கான மக்களை ஒன்று திரட்டி பல மணி நேரம் அமர வைக்கப்பட்டார்கள். கொரோனா தொற்றுப் பரவல் உச்சக்கட்டத்தில் இருந்த போது இப்படி மக்களை ஒன்று திரட்டி இந்தியாவில் நோய் பரவ மோடியும் ட்ரம்பும் முக்கிய காரணமாக இருந்தார்கள் என்று சர்வதேச ஊடகங்கள் குற்றம் சாட்டின என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

+ - reset