நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

போலி செய்திகள் பரப்பியதாக 8 யூடியூப் சேனல்களுக்கு இந்தியா தடை

புது டெல்லி:

இந்தியாவுக்கு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும்விதமாக போலியான செய்திகளைப் பரப்பிய 8 யூடியூப் சேனல்களுக்கு அரசு தடை விதித்தது. 

தடை செய்யப்பட்ட இந்திய யூடியூப் சேனல்கள் பிரபல தொலைக்காட்சி சேனல்களின் லோகோ, செய்தி வாசிப்பாளர்களின் புகைப்படத்தையும் முறைகேடாகப் பயன்படுத்தி, போலிச் செய்திகளைப் பரப்பி பார்வையாளர்களை நம்ப வைத்துள்ளனர்.

மேலும், அரசால் மத வழிபாட்டுத் தலங்கள் இடிக்கப்படுவதாகவும், திருவிழா கொண்டாட்டத்துக்குத் தடை விதிக்கப்படுவதாகவும், நாட்டில் மத மோதல் நடைபெறுவதாகவும் போலிச் செய்திகளைப் பரப்பியுள்ளனர்.

இதுபோன்ற செய்திகள் சமூக நல்லிணக்கத்தைப் பாதிக்கக்கூடும் என்பதால், அந்த சேனல்களின் மீது தடை விதிக்கப்பட்டது.

இந்த 8 சேனல்களும் கூட்டாக 114 கோடி பார்வையாளர்களையும், 85.73 லட்சம் சந்தாதாரர்களையும் கொண்டுள்ளன என்று இந்திய அரசு தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

+ - reset