
செய்திகள் இந்தியா
பாஜக ஆட்சிமன்றக் குழுவில் இருந்து நிதின் கட்கரி, சிவராஜ் சிங் செளஹான் நீக்கம்
புது டெல்லி:
பாஜக ஆட்சிமன்றக் குழுவில் இருந்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.
கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா உள்ளிட்ட 6 பேர் இக் குழுவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அக் கட்சியின் உயர் அதிகாரக் குழுவான ஆட்சிமன்றக் குழுவில் இருந்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.
கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா, கே.லட்சுமண், சுதா யாதவ், சத்தியநாராயண் ஜாட்டியா, முன்னாள் காவல் துறை அதிகாரியான இக்பால் சிங் லால்புரா, சோனோவால் உள்ளிட்ட 6 பேர் புதிதாக இக் குழுவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதேபோல் பாஜகவின் மத்திய தேர்தல் குழுவிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
இக் குழுவின் புதிய உறுப்பினர்களாக மகாராஷ்டிர துணை முதல்வர் தேவேந்திர பட்னவீஸ், மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ், ராஜஸ்தான் தலைவர் ஓம் மாத்தூர், பாஜக மகளிர் அணித் தலைவி வானதி சீனிவாசன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இக் குழுவில் ஏற்கெனவே இடம்பெற்றிருந்த விஜயா ரஹத்கருக்கு பதிலாக வானதி சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆட்சி மன்றக் குழுவில் இருந்து நீக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து நிதின் கட்கரி, சிவராஜ் சிங் சௌஹான் ஆகியோரின் மத்திய தேர்தல் குழு உறுப்பினர் பதவியும் முடிவுக்கு வந்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
May 9, 2025, 4:16 am
பாகிஸ்தானிலிருந்து ஏவப்பட்ட 8 ஏவுகணைகளை இந்திய இராணுவம் விண்ணில் அழித்தது
May 8, 2025, 5:14 pm
ஏர் இந்தியா இந்திய ராணுவ வீரர்களுக்குச் சிறப்பு சலுகையை அறிவித்தது
May 8, 2025, 6:57 am
சிந்தூர் நடவடிக்கைக்கு பல்வேறு மாநில முதல்வர்கள், கட்சி தலைவர்கள் வாழ்த்து
May 7, 2025, 11:13 am
இந்திய முப்படை தளபதிகளுடன் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை
May 7, 2025, 10:35 am
ஆபரேஷன் சிந்தூர் எதிரொலியால் வட இந்தியாவில் விமான சேவைகள் பாதிப்பு
May 2, 2025, 5:01 pm