செய்திகள் இந்தியா
சகேஷ் சந்திரசேகர் வழக்கில் நடிகை ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் பெயர் சேர்ப்பு
புது டெல்லி:
இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் சம்பந்தப்பட்ட பணமோசடி வழக்கில், தில்லி நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை தாக்கல் செய்த குற்றப் பத்திரிகையில் ஹிந்தி நடிகை ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.
ஃபோர்டிஸ் ஹெல்த்கேர் நிறுவனத்தின் நிர்வாகம் சாரா துணைத் தலைவராகவும் இருந்த ஷிவிந்தர் மோகன் சிங்கின் மனைவி அதிதி சிங் உள்பட பல்வேறு முக்கிய பிரமுகர்களிடம் பல கோடி ரூபாய் பண மோசடி செய்ததாக இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர், அவரின் மனைவி லீனா மரியா பால் உள்பட 8 பேரை அமலாக்கத் துறை கைது செய்துள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக அமலாக்கத் துறை ஏற்கெனவே வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது:
பணம் பறிப்பு உள்பட பல்வேறு குற்றச் செயல்கள் மூலம் கிடைத்த பணத்தில் ஹிந்தி நடிகை ஜாக்குலின் ஃபெர்னாண்டஸுக்கு சுகேஷ் சந்திரசேகர் பரிசுகள் வழங்கியுள்ளார்.
அந்தப் பரிசுகளின் மதிப்பு ரூ.5.71 கோடி. அத்துடன் ஜாக்குலின் ஃபெர்னாண்டஸின் இணையவழி தொடருக்கு கதை எழுத அவரது சார்பாக எழுத்தாளர் ஒருவருக்கு ரூ.15 லட்சத்தை முன்பணமாக சுகேஷ் சந்திரசேகர் அளித்துள்ளார்.
இதுமட்டுமின்றி ஜாக்குலினின் நெருங்கிய குடும்ப உறுப்பினர்களுக்கு 1,72,913 அமெரிக்க டாலர்கள் (சுமார் ரூ.1.3 கோடி), 26,740 ஆஸ்திரேலிய டாலர்களை (சுமார் ரூ.14 லட்சம்) ஹவாலா மோசடியாளர் மூலம் சுகேஷ் வழங்கியுள்ளார்.
சுகேஷிடம் இருந்து பரிசுகள் பெற்றதாக ஜாக்குலின் வாக்குமூலம் அளித்தார் ..
கடந்த ஏப்ரல் மாதம் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் ஜாக்குலினுக்குச் சொந்தமான ரூ.7.12 கோடி வைப்புத் தொகை, ரூ.15 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை அமலாக்கத் துறை முடக்கியது.
தொடர்புடைய செய்திகள்
January 4, 2026, 4:26 pm
திருச்சூர் ரயில் நிலையத்தில் பயங்கர தீ விபத்து
January 2, 2026, 3:20 pm
புத்தாண்டு தினத்தில் சபரிமலையில் திரண்ட பக்தா்கள்
December 31, 2025, 12:08 pm
முன்னாள் குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கருக்கு ஒன்றிய அரசு இதுவரை வீடு ஒதுக்காமல் இழுத்தடிப்பு
December 29, 2025, 1:18 pm
விமானிகளுக்கு போதிய ஓய்வளிக்க 130 விமான சேவைகளை குறைக்க முன்வந்தது இண்டிகோ நிறுவனம்
December 27, 2025, 8:20 am
திருப்பதி கோவில் காணிக்கையில் ரூ.100 கோடி மோசடி செய்தவர்: விரைவில் தீர்ப்பு
December 26, 2025, 4:13 pm
பான் அட்டை வைத்திருப்பவர்கள், ஆதார் அட்டையுடன் இணைக்க டிச. 31ஆம் தேதியே கடைசி நாள்: இந்திய அரசு அறிவிப்பு
December 26, 2025, 12:19 pm
இந்தியாவில் ரயில் கட்டணம் இன்று முதல் உயர்கிறது
December 24, 2025, 8:54 pm
