நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

டிரம்ப் இல்லத்திலிருந்து ரகசிய அரசு ஆவணங்கள் பறிமுதல்

வாஷிங்டன்:

அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்பின் பண்ணை இல்லத்தில் அந்த நாட்டு தேசிய புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ. இந்த வாரம் நடத்திய சோதனையில் பல ரகசிய அரசு ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஃபுளோரிடா மாகாணம், பாம் பீச்சிலுள்ள முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பின் இல்லத்தில் கடந்த திங்கள்கிழமை நடத்தப்பட்ட சோதனையில், அங்கிருந்து 11 ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

அவற்றில் சில, தேசப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் ரகசியத் தகவல்களைக் கொண்டவை என்பதைக் குறிப்பதற்கான என்ற முத்திரை உள்ளன.

இது தவிர, 20க்கும் மேற்பட்ட பெட்டிகள் அந்த இல்லத்தில் கைப்பற்றப்பட்டன. அவற்றில் போட்டோக்களை இணைக்கும் கருவி, கையால் எழுதப்பட்ட குறிப்பேடு, பிரான்ஸ் அதிபர் தொடர்பான சில விவரங்கள் அடங்கிய குறிப்பு உள்ளிட்டவை இருந்தன.

இந்த ரகசிய ஆவணங்களை வைத்திருப்பது, எடுத்துச் செல்வது ஆகியன குற்றமாகும் என்று எஃப்.பி.ஐ தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

+ - reset