நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

கெசானி சூறாவளி கொடூரம்: மடகாஸ்கரில் 2.5 இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்

டோமாசினா, மடகாஸ்கர்: 

பலத்த காற்றுடன் வீசிய கெசானி சூறாவளி மடகாஸ்கரின் இரண்டாவது பெரிய நகரமான டோமாசினாவை கடுமையாக தாக்கியுள்ளது. இதில் குறைந்தது 31 பேர் உயிரிழந்துள்ளனர்.

செவ்வாய்க்கிழமை கரையை கடந்த இந்த சூறாவளி 250 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசி நகரை சீரழித்துள்ளது. தேசிய அபாய, பேரிடர் மேலாண்மை அலுவலகம் வெளியிட்ட தகவலின்படி, நால்வர் காணாமல் போயுள்ளதுடன், குறைந்தது 36 பேர் படுகாயமடைந்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் 2.5 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் இதில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

டோமாசினா நகரின் 75 சதவீதம் பகுதிகள் அழிந்துள்ளதாக புதிய தலைவர் கர்னல் மைக்கேல் ராண்ட்ரியானிரினா தெரிவித்தார். இந்த நிலைமை நாட்டின் தனித்திறனை மீறியுள்ளதாகவும் அவர் கூறினார்.

அட்சினானனா பகுதியும் இதனால் கடுமையாக சேதமடைந்துள்ளது. வீடுகளின் 90 சதவீத கூரைகள் பறந்துவிட்டதாகவும், சாலைகளில் மரங்கள்,  இரும்புத் தகடுகள் விழுந்ததால் முற்றிலும் மறிக்கப்பட்டுள்ளதாகவும் அமைப்புகள் தெரிவித்துள்ளன.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset