செய்திகள் உலகம்
போதைப்பொருள் கடத்தல் குற்றத்திற்காக சிங்கப்பூரில் மீண்டும் ஒரு மலேசியர் தூக்கிலிடப்பட்டுள்ளார்
சிங்கப்பூர்:
2018ஆம் ஆண்டு போதைப்பொருள் கடத்தல் குற்றத்தில் கைது செய்யப்பட்ட மலேசியரான லிங்கேஸ்வரன் ராஜேந்திரனுக்கு நேற்று தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது.
“லிங்கேஸ்வரன் ராஜேந்திரனுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனை பிப்ரவரி 11ஆம் தேதி நிறைவேற்றப்பட்டது. அவருக்கு சட்டப்படி உரிய விசாரணை வழங்கப்பட்டதுடன், மேல்முறையீட்டு காலத்தில் வழக்கறிஞர் மூலம் பிரதிநிதித்துவமும் பெற்றார்,” என மத்திய போதைப்பொருள் தடுப்பு பணியகம் (CNB) இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
33 வயதான லிங்கேஸ்வரன், 52.77 கிராம் டயாமார்பின் (ஹெரோயின்) போதைப்பொருளைக் கடத்திய குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டு, அக்டோபர் 15, 2018 அன்று தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது .
அவரது மேல்முறையீடு 2019 மார்ச் 27ஆம் தேதி நிராகரிக்கப்பட்டது.
“மேல்முறையீடு நிராகரிக்கப்பட்ட பின்னர், லிங்கேஸ்வரன் எட்டு முறை கூடுதல் மனுக்களைத் தாக்கல் செய்துள்ளார். அவை அனைத்தும் நிராகரிக்கப்பட்டன,” என CNB தெரிவித்தது.
அவருக்கு மன்னிப்பு வழங்கக் கோரி ஜனாதிபதிக்கு தாக்கல் செய்த மனுவும் வெற்றி பெறவில்லை.
மேலும், கடந்த பிப்ரவரி 9ஆம் தேதி, சிங்கப்பூர் சிறைச்சாலை சேவையில் உள்ள அதிகாரிகள் மீது தவறு, அலட்சியம், கடமையிலிருந்து விலகியதாக, லிங்கேஸ்வரனின் வழக்கறிஞர் சிவில் வழக்கு தொடர்ந்ததாக CNB தெரிவித்தது.
அந்த வழக்கு முடிவடையும் வரை தண்டனையை ஒத்திவைக்க கோரிய மனுவையும் அவரது வழக்கறிஞர் தாக்கல் செய்திருந்தார். இருப்பினும், அந்த மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்தது.
க.தட்சனாமூர்த்தி, ப.பன்னீர்செல்வம் ஆகியோருக்குப் பிறகு லிங்கேஸ்வரன் போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட மூன்றாவது மலேசியராவார்.
மேலும், சாமிநாதன் என்ற மற்றொரு மலேசிய கைதியும், சிங்கப்பூரில் தூக்குத் தண்டனைக்காக் காத்திருப்போர் பட்டியலில் இன்னும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
February 12, 2026, 9:06 pm
சூடானில் 30 பயணிகளுடன் சென்ற படகு கவிழ்ந்ததில் 21 பேர் பலியாகினர்
February 12, 2026, 2:41 pm
வைரல் வீடியோவிற்காக நஞ்சு நண்டைச் சாப்பிட்ட பிலிப்பைன்ஸ் பெண் சமூக ஊடகர் பலி
February 12, 2026, 11:04 am
கெசானி சூறாவளி கொடூரம்: மடகாஸ்கரில் 2.5 இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்
February 11, 2026, 12:22 pm
பள்ளி, வீட்டை இலக்காகக் கொண்ட துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் பலி
February 11, 2026, 11:39 am
காசாவுக்கு 8,000 வீரர்களை அனுப்பத் தயார்: இந்தோனேசியாவின் அதிபர் அறிவிப்பு
February 10, 2026, 3:38 pm
பேங்காக்கில் இரவு நேரச் சந்தையில் தீ விபத்து: 48 கடைகள் சேதம்
February 10, 2026, 11:23 am
நியூயார்க் நகரில் கடும் குளிர்: 18 பேர் பலி
February 9, 2026, 12:58 pm
ஜப்பான் தோ்தல்: பிரதமா் சனே தகாய்ச்சி கட்சி பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்றது
February 9, 2026, 12:35 pm
