நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் சிந்தனைகள்

By
|
பகிர்

தாய் சொல்லைத் தட்டாதே..! - வெள்ளிச் சிந்தனை

அவருக்கு வயது 95. ஆனால் முப்பது வயது இளைஞரின் சுறுசுறுப்பு அவரிடம் இருந்தது. 

அதிகாலை 4.30 மணிக்கு அவருடைய நாள் தொடங்கும். படுக்கப் போகும்போது பத்தாகிவிடும். 

நாள் முழுவதும் மருத்துவப் பல்கலைக் கழகம், மருந்தகம், பதிப்பகம், வானொலி, மக்கள் சேவை, பத்திரிகை, எழுத்துப் பணி என்று பிசியாக இருப்பார். அவர் ஒரு வெற்றிகரமான மருத்துவராகவும் இருந்தார். ஒரு கோடிக்கும் அதிகமான நோயாளிகளை குணப்படுத்தியிருக்கின்றார். 

அவருடைய அன்றாட வானொலி நிகழ்ச்சிகள் புகழ்பெற்றவை. அவர் ஓர் இஸ்லாமிய அறிஞரும் கூட. ஏராளமான புத்தகங்களை எழுதி இருக்கின்றார். 

அவர் எழுதிய ரோஷ்னி, (வெளிச்சம்) நூரிஸ்தான் (ஒளிரும் நாடு) போன்ற நூல்கள் இன்றளவும் பேசப்படுகின்றன. நவ்நிஹால் இளந்தளிர் என்கிற சிறுவர் பத்திரிகையிலும் அவர் தொடர்ச்சியாக எழுதி வந்தார். 

அவர் ஒரு நாளும் நோயுற்றது கிடையாது. ஒரு நிமிடமும் சோர்வடைந்தது கிடையாது. தலைவலி, காய்ச்சல், ஊஹும் எந்தப் பிரச்னையும் அவரை நெருங்கியது கிடையாது. 

அவருடைய பெயர் ஹக்கீம் முஹம்மத் சயீத்.

பாகிஸ்தானின் தலைசிறந்த மருத்துவர். உலகப் புகழ்பெற்ற ஹம்தர்த் நிறுவன அதிபர். 

ஒரு முறை லண்டன் பிபிசி அவரை பேட்டி கண்டது.

‘உங்களுடைய உடல் நலத்தின் இரகசியம் என்ன?’ என்று ஒரு கேள்வி. 

அவர் சொன்னார்: ‘நான் வயிறு நிறைய உண்பதில்லை. 24 மணி நேரத்திற்கு ஒரு முறைதான் உண்கிறேன். எப்போதும் என்னை பிசியாக வைத்துக்கொள்கின்றேன். ஷேர்வானி உட்பட என்னுடைய துணிகளை நானே துவைத்துக்கொள்கின்றேன். எனது குளியலறையையும் நானே சுத்தப்படுத்துகின்றேன்’.

Hamdard Laboratories promotes to Shine like no one | Passionate In Marketing

ஹக்கீம் சயீத் தம்முடைய வெற்றியின் இரகசியமாக கருதுவது எது? 

அவரே சொன்னார்: ‘ஒரு முறை நான் இத்தாலியில் சுற்றுப்பயணம் செய்து கொண்டிருந்தேன். நோயுற்றிருந்த என்னுடைய தாய் மரணப்படுக்கையில் இருப்பதாக தகவல் வந்தது. நான் உடனே அடித்து பிடித்து பறந்து வந்தேன். எனது தாய் தன்னுடைய மெலிந்த கைகளால் எனது கையைப் பிடித்துக் கொண்டு தீர்க்கமான குரலில், ‘என் அன்பு மகனே! எனது கடைசி ஆசை என்ன தெரியுமா? நீ வாழ்நாள் முழுவதும் எவரையும் பழிவாங்கக் கூடாது’ என்றார். 

அன்னையின் அந்த அறிவுரையை நான் மறக்கவேயில்லை. இன்னும் சொல்லப் போனால் என்னுடைய வெற்றியின் இரகசியமும் அதுதான். உடல் நலத்துக்குக் காரணமும் அதுதான்’.

உண்மைதானே. வெறுப்பும் வன்மமும் இழப்பை மட்டுமே தரும். உடல்நலத்தையும் கெடுக்கும். மன்னிக்கும் மாண்பும் கடின உழைப்பும் வெற்றியை தந்தே தீரும். உடல்நலமும் சிறக்கும். சிந்திக்க வேண்டிய வார்த்தைகளல்லவா...

எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே.

தமிழில்: லுத்ஃபுல்லாஹ்

தொடர்புடைய செய்திகள்

+ - reset