நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

என்டிஆரின் மகள் தற்கொலை

ஹைதராபாத்:

ஆந்திர முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சி நிறுவனருமான என்.டி.ராம ராவின் மகள் உமா மகேஸ்வரி  தற்கொலை செய்து கொண்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

ஹைதராபாதின் ஜூபிலி ஹில்ஸ் பகுதியில் உள்ள அவருடைய இல்லத்தில் மின் விசிறியில் தூக்கிட்ட நிலையில் அவர் உயிரிழந்திருந்தார்.

தொடர் உடல்நிலக் குறைவு காரணமாக மன அழுத்தத்தில் இருந்த வந்ததே அவருடைய இந்த முடிவுக்கு காரணமாக இருக்கலாம் என முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

எனினும், உயிரிழப்புக்கான காரணம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை எனவும் போலீஸார் தெரிவித்தனர்.

என்டிஆரின் மருமகனும் தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு, என்டிஆர் மகனும் பிரபல தெலுங்கு திரைப்பட நடிகருமான என்.பாலகிருஷ்ணா ஆகியோர் உமா மகேஸ்வரி வீட்டிற்கு வந்து அஞ்சலி செலுத்தினர்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset