நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

Uber நிறுவனம் இந்தியாவில் படகுச் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது 

காஷ்மீர்: 

Uber நிறுவனம் இந்தியாவின் காஷ்மீர் மாநிலத்தில் படகுச் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.

காஷ்மீரிலுள்ள மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமான டால் லேக் (Dal Lake) என்ற ஏரியில் அந்தச் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

அந்த ஏரியில் Shikara என்றழைக்கப்படும் பலகையால் செய்யப்பட்ட படகுகளில் பயணம் செய்ய குறைந்தது 12 மணி நேரங்களுக்கு முன்பாக அல்லது 15 நாள்களுக்கு முன்பாக சுற்றுப்பயணிகள் இனி முன்பதிவு செய்யலாம்.

ஏற்கனவே லண்டன் உள்ளிட்ட இதர பல இடங்களில் நிறுவனம் இத்தகைய போக்குவரத்துச் சேவையைக் கொண்டுவந்துள்ளது. ஆனால் இந்தியாவில் இதுதான் முதல்முறை.

டால் லேக் ஏரியில் சுமார் 4,000 Shikara படகுகள் உள்ளன. அவை உள்ளூர், வெளியூர் மக்களிடையே மிகவும் பிரபலம்.

வாடிக்கையாளர்களையும் Shikara படகு நடத்துநர்களையும் இணைக்க Uber உதவும். ஆனால் அந்தச் செயலி வழியாக முன்பதிவு செய்யும்போது அதன் கட்டணம் நேரடியாக Shikara நடத்துநரைச் சென்றுசேரும் என்றது நிறுவனம்.

Uber Shikara எனும் அந்தச் சேவை தொழில்நுட்பத்தையும் பாரம்பரியத்தையும் இணைக்கும் புதிய முயற்சி என நிறுவனம் சொன்னது.

Uber சேவை Shikara படகோட்டிகளுக்கிடையே மாறுபட்ட கருத்துகளை உருவாக்கியுள்ளது.

வியாபாரத்தைப் பெருக்க உதவும் என்பதால் சில படகோட்டிகள் அந்தச் செயலியை வரவேற்றுள்ளனர்.

இன்னும் சிலர் கட்டணம் முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்டுவிடும் என்பதால் வாடிக்கையாளர்களிடம் இனி பேரம் பேச முடியாது என்று நினைக்கின்றனர்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset