செய்திகள் இந்தியா
பள்ளிவாசல்களுக்கு எதிராக தொடரும் வழக்குகளுக்கு நீதிபதி சந்திரசூட் காரணம்: மூத்த வழக்கறிஞர் தவே விமர்சனம்
புது டெல்லி:
பாபர் பள்ளிவாசலைத் தொடர்ந்து ஞானவாபி, மதுரா, சம்பல் பள்ளிவாசல் மற்றும் ஆஜ்மீர் தர்காவை ஹிந்துக்கள் உரிமை கொண்டாடுவதற்கு உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் அளித்த வாய்மொழி உத்தரவே காரண் என்று உச்சநீதி மன்ற மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே கடுமையாக விமர்சித்தார்.
2022 மே மாதம் ஞானவாபி பள்ளிவாசலில் சிவலிங்கம் உள்ளதாக கூறி ஆய்வு மேற்கொள்ள கோரும் வழக்கை விசாரித்த அப்போதைய தலைமை நீதிபதி சந்திரசூட், இந்தியா சுதந்திரம் பெற்ற 1947-இல் இருந்தபடிய வழிபாட்டு தலங்கள் அப்படியே தொடர வேண்டும் என்று கூறும் சட்டத்தில், எந்த ஒரு மதத்தன்மை குறித்த விசாரணையை தடை செய்யவில்லை என்று வாய்மொழியாக கூறியிருந்தார்.
இந்நிலையில், தி வயர் செய்தி இணைய தளத்தில் மூத்த பத்திரிகையாளர் கரண் தாப்பருக்கு துஷ்யந்த் தவே அளித்த பேட்டி யில், உச்சநீதிமன்றம் அதன் சொந்த தீர்ப்புக்கு கட்டுப்படா விட்டால், இந்த உச்சநீதிமன்றம் குடிமக்களை நாளுக்கு நாள் தூக்கி எறியும். அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு ஞானவாபி பள்ளவாசல் வழக்கிலும் அரசியல் சாசனத்திற்கு எதிரான நிலைப் பாட்டை எடுத்தார்.
சந்திரசூட் உத்தரவுக்குப் பின் ஞானவாபி மசூதியில் இந்திய தொல்லியல் துறை ஆய்வு செய்தது. சந்திர சூட்டின் தவறான தீர்ப்பு காரண மாகவே அயோத்தியில் நடந்தது போன்று ஞானவாபி, மதுரா, சம்பல் மற்றும் அஜ்மீர் ஆகிய இடங்க ளில் நிகழ்ந்து வருகிறது.
சந்திரசூட் நாட்டில் உள்ள மசூதி களை ஆய்வு செய்ய அனுமதித்த தன் மூலம் அரசியலமைப்பிற்கும், நாட்டிற்கும் மிகப்பெரிய தவறு செய்துவிட்டார். சந்திரசூட் தனது தீர்ப்பு மூலம் இந்த நாட்டிற்கு பெரும் கேடு விளைவித்துள்ளார் என்று நான் நினைக்கிறேன். சட்டத்தின் ஆட்சியை உடைத்ததற்கு அவர்கள் பொறுப்பல்லவா?
சந்திரசூட் யாரோ ஒருவரின் கைகளில் விளையாடுகிறார். சந்திர சூட் பிரதமர் மோடியுடன் இணை ந்து செய்த பூஜை, அயோத்தி தீர்ப்பு தனக்கு கடவுளால் தெரியப்படுத்தப்பட்டது போன்ற கருத்துகள் மூலம் உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சந்திர சூட் ஆளும் கட்சியின் கைப்பாவையாக உள்ளார் என்றார்
நேர்காணலின் முடிவில் துஷ்யந்த் தவே அழு குரலில், ‘சம்பல் வன்முறையை நினைத்து நான் தூக்கமில்லாத இரவுகளைக் கொண்டிருக்கிறேன். எனது நாட்டைப் பற்றி நான் கவலைப்படுகிறேன். இது என்னை எவ்வளவு பாதிக்கிறது என்று உங்களுக்குத் தெரியாது. சம்பல் வன்முறை சிறு பான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்களை எவ்வளவு பாதிக்கிறது; என்ன நடக்கிறது என்பது மிகவும் வருத்தமாக இருக்கிறது என கூறினார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
December 3, 2024, 10:12 am
Uber நிறுவனம் இந்தியாவில் படகுச் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது
December 2, 2024, 1:07 pm
கெஜ்ரிவால் மீது திரவம் வீச்சு
December 2, 2024, 12:59 pm
அமெரிக்காவில் இந்திய மாணவர் சுட்டுக் கொலை
December 2, 2024, 10:11 am
ஆந்திராவில் வக்பு வாரியம் கலைக்க சந்திரபாபு நாயுடு உத்தரவு
November 29, 2024, 10:23 pm
ஷாஹி ஈத்கா ஜாமா பள்ளிவாசல் ஆய்வு விவகாரம்: கீழமை நீதிமன்ற உத்தரவை நிறுத்தி வைத்தது உச்ச நீதிமன்றம்
November 27, 2024, 3:59 pm
கட்டி முடிக்கப்படாத மேம்பாலத்திலிருந்து விழுந்து மூவர் மரணம்: Google Maps மீது விசாரணை
November 25, 2024, 8:43 pm
அமெரிக்கா குற்றம்சாட்டியும் அதானியை பிரதமர் மோடி கைது செய்யாதது ஏன்?: ராகுல் கேள்வி
November 25, 2024, 4:23 pm
உ.பி.பள்ளிவாசல் ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்த 3 பேர் பலி
November 24, 2024, 1:23 pm