நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

கெஜ்ரிவால் மீது திரவம் வீச்சு

புது டெல்லி:

தில்லி முன்னாள் முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான  அரவிந்த் கெஜ்ரிவால் மீது திடீரென ஒரு நபர் திரவத்தை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தில்லி பேரவைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தில்லி மாளவியா நகரில் உள்ள சாவித்திரி நகரில் கெஜ்ரிவால் யாத்திரை மேற்கொண்டார்.

அங்கு கூடியிருந்த மக்களைச் சந்தித்து உரையாடினார்.

அப்போது, கூட்டத்திலிருந்த நபர் ஒருவர் கெஜ்ரிவால் மீது திடீரென திரவத்தை வீசினார். அவரை போலீஸார் கைது செய்தனர்.

கெஜ்ரிவால் மீது எரி சாராயம் வீசப்பட்டு தீ வைக்க அவர் முயன்றதாக தில்லி அமைச்சர் கூறினார்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset