நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தொழில்நுட்பம்

By
|
பகிர்

5ஜி அலைக்கற்றை: ரூ.1.5 லட்சம் கோடிக்கு ஏலம்: ஜியோ முதலிடம்

புது டெல்லி:

கடந்த ஒருவாரமாக நடைபெற்ற ஐந்தாம் தலைமுறை (5ஜி) அலைக்கற்றை ஏலம் ரூ.1,50,173 கோடிக்கு ஏலம் போனது. ஏரூ.88,078 கோடி மதிப்பிலான அலைக்கற்றையை வாங்கி ஜியோ முதலிடம் பெற்றுள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல், வோடஃபோன்-ஐடியா, அதானி நிறுவனம் ஆகியவை இந்த ஏலத்தில் பங்கேற்றன. சுமார் 40 சுற்றுகள் நடைபெற்ற ஏலம் திங்கள்கிழமை நிறைவடைந்தது.

தொழிலதிபர் முகேஷ் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், ரூ.88,078 கோடி மதிப்பிலான அலைக்கற்றையைப் பெற்றது. 5ஜி தொழில்நுட்பத்துக்கு முக்கியமாகக் கருதப்படும் 700 மெகா ஹெர்ட்ஸ் அதிர்வெண் கொண்ட அலைக்கற்றை உள்ளிட்ட பல்வேறு அலைக்கற்றைகளை ஜியோ நிறுவனம் ஏலத்தில் எடுத்தது.

பார்தி ஏர்டெல் நிறுவனமானது ரூ.43,084 கோடி மதிப்பிலான அலைக்கற்றைகளை ஏலத்தில் எடுத்தது. வோடஃபோன்-ஐடியா நிறுவனம் ரூ.18,784 கோடிக்கு அலைக்கற்றைகளை வாங்கியது.

அதானி நிறுவனமானது 26 ஜிகா ஹெர்ட்ஸ் அதிர்வெண் கொண்ட அலைக்கற்றை உள்ளிட்டவற்றை ரூ.212 கோடிக்கு வாங்கியது. 26 ஜிகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றையைப் பொது சேவையில் பயன்படுத்த முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏலம் விடப்பட்ட மொத்த அலைக்கற்றையில் 1 சதவீதத்துக்கும் குறைவாகவே அதானி ஏலத்தில் எடுத்தது.

தொடர்புடைய செய்திகள்

+ - reset