நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தொழில்நுட்பம்

By
|
பகிர்

துபாயில் அடுத்த ஆண்டு பறக்கும் டாக்சி சேவை அறிமுகப்படுத்தப்படலாம் 

அபு தாபி:

துபாயில் அடுத்தாண்டு பறக்கும் டாக்சி சேவை அறிமுகப்படுத்தப்படலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

பறக்கும் டாக்சியின் (air-taxi) முதல் சோதனை ஓட்டம், இவ்வாரம் நடைபெற்றது.

பறக்கும் டாக்சி சேவை தற்போதுள்ள போக்குவரத்து வசதியின் மீதுள்ள அழுத்தத்தைக் குறைப்பதோடு நெரிசலின்போது சீக்கிரமாகவும் பயணம் செய்யலாம் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர். 

பறக்கும் டாக்சி மின்சக்தி மூலம் இயங்குவதால் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படாது என்றும் குடியிருப்புகளைக் கடக்கும்போது அதிக சத்தம் கேட்காது என்றும் அதிகாரிகள் கூறினர். 

பறக்கும் டாக்சியால் 160 கிலோமீட்டர் தூரம் வரை பயணம் செய்ய முடியும். ஒரு மணி நேரத்திற்கு 320 கிலோமீட்டர் வேகத்தில் பயணம் மேற்கொள்ள முடியும்.

காரில் 45 நிமிடங்கள் நீளும் பயணங்கள் பறக்கும் டாக்சியில் 12 நிமிடங்களில் நிறைவு பெறும்.

முதல் கட்டத்தில் கட்டணம் சற்று அதிகமாகவே இருக்கும். ஆனால் நாளடைவில் அது அனைவருக்கும் கட்டுப்படியாகும் சேவையாக மாறிவிடும் என்று எதிர்பார்க்கலாம் என்று அதை வெள்ளோட்டமிடும் Joby Aviation நிறுவனம் கூறியது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset