செய்திகள் தொழில்நுட்பம்
160 கோடி சமூக வலைதள கணக்குகளின் தகவல்கள் திருடப்பட்டுவிட்டன: கடவுச்சொல்லை மாற்ற அறிவுறுத்தல்
நியூயார்க்:
உலகளவில் இணையம் பயன்படுத்துவோரின் 1,600 கோடி பாஸ்வேர்ட்கள்(கடவுச்சொல்) திருடப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. உலகம் முழுவதும் சிறியவர்கள், பெரியவர்கள் என அனைவரும் கூகுள், பேஸ்புக், எக்ஸ் (ட்விட்டர்), இன்ஸ்டாகிராம், இமெயில் உள்ளிட்ட பல்வேறு சமூக ஊடக கணக்குகளை வைத்துள்ளனர். மேலும் அரசு, தனியார் அலுவலகங்கள் உள்பட பல தரப்பிலும் சமூக ஊடக கணக்குகள் செயல்பாட்டில் உள்ளன. இந்த கணக்குகளை பயன்படுத்த பாஸ்வேர்ட்கள் மிகவும் முக்கியமானவை.
இந்நிலையில் உலகளவில் 1,600 கோடி பாஸ்வேர்ட்கள் திருடப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. முதன்முறையாக அதிக எண்ணிக்கையில் கடவுச்சொற்கள் திருடப்பட்டிருப்பது இதுவே முதல்முறை.
இவ்வாறு திருடப்பட்ட கடவுச்சொற்கள் டார்க் வெப் தளத்தில் விற்கப்பட்டு ஹேக்கர்களுக்கு செல்கிறது. அதை பயன்படுத்தி தனி நபர் அல்லது நிறுவனங்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டு சமூக விரோத செயல்களை செய்யப்படுகின்றன.
மேலும் இது ஒரு நாட்டின் பாதுகாப்புக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக கருதப்படுகிறது. மிகப்பெரும் இந்த திருட்டிலிருந்து தப்பிக்க உடனடியாக அனைத்து சமூக ஊடக பயனாளர்களும் தங்கள் பாஸ்வேர்ட்களை உடனே மாற்றுமாறு நிபுணர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
- ஃபிதா
தொடர்புடைய செய்திகள்
October 29, 2025, 7:07 am
விக்கிபீடியாவுக்கு போட்டியாக Grokipedia-வை அறிமுகம் செய்தார் எலான் மஸ்க்
October 17, 2025, 3:18 pm
கரடிகள் நடமாட்டத்தைக் கண்டுபிடிக்க AI செயலி
October 15, 2025, 10:43 pm
ஆந்திராவில் 15 பில்லியன் டாலர் முதலீட்டில் AI தரவு மையம் அமைக்கிறது கூகுள்
September 29, 2025, 10:49 pm
சிங்கப்பூரில் Chatbot மூலம் இனி காவல் நிலையத்தில் சுலபமாகப் புகார் அளிக்கலாம்
September 26, 2025, 3:05 pm
ரயிலில் இருந்து அக்னி பிரைம் ஏவுகணை ஏவி சாதனை
September 8, 2025, 9:14 pm
சைபர் செக்கியூரிட்டி மலேசியாவின் முதல் வாகன தடயவியல் ஆய்வகத்தை கோபிந்த் சிங் தொடக்கி வைத்தார்
August 25, 2025, 8:03 pm
ககன்யான் திட்டத்தில் இந்தியா முக்கிய சோதனை
August 15, 2025, 12:02 am
நிலவில் அணு மின் நிலையம்: விரைவுபடுத்துகிறது நாசா
August 9, 2025, 2:54 pm
